Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 27 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்தளையில் நிறுவப்பட்டுள்ள, மகம் ருஹுணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தைப் (MRICH) பராமரிக்க மாதாந்தம் 17 மில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரிய சர்வதேசக் கூட்டாண்மை நிறுவனத்தின் உதவியுடன் 15.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நகர அபிவிருத்தி அதிகார சபையால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இம் மாநாட்டு மண்டபம் தற்போது உபயோகிக்கப்படுவதில்லை எனவும், இந்த நிலையத்தின் மூலமாக அரசாங்கத்துக்கு எவ்வித வருமானமும் கிடைக்கப்பெறுவில்லை எனவும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக தெரிவித்தார்.
இந்த மண்டபம் ஹம்பாந்தோட்டையின் சிரிபோபுர பகுதியில் அமைந்துள்ளது. இலங்கையில் முதன் முதலாக நடைபெற்ற பொதுநலவாய இளைஞர்கள் மாநாட்டுக்காக இந்த மண்டபம் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு அதிகமாக எவரும் இந்த மண்டபத்தைப் பயன்படுத்தவில்லை, ஆனாலும் இந்த மண்டபத்தைப் பராமரிப்பதற்காக மாதாந்தம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 17 மில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறது என அமைச்சர் குறிப்பிட்டார்.
மிதக்கும் சந்தை மற்றும் ஆர்கேட்கள் போன்றனவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதயில் நிர்வகிக்கப்படுகிறது. இத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், இவற்றினூடாக நீண்ட கால அடிப்படையில் வருமானமீட்டக்கூடிய திட்டங்கள் இதுவரையில் வகுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .