2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

Mark and Comm, GlobalCom PR Network உடன் இணைவு

Freelancer   / 2025 ஒக்டோபர் 11 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பொது ஊடக உறவுகள் மற்றும் தொடர்பாடல் முகவர் நிறுவனமான Mark and Comm, சர்வதேச புகழ்பெற்ற GlobalCom PR Network இன் அங்கத்துவத்தைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் 100 க்கும் அதிகமான நாடுகளில் இயங்கும் சுமார் 80 க்கும் அதிகமான சுயாதீன பொது ஊடக உறவுகள் முகவர் நிறுவனங்களை தனது வலையமைப்பில் கொண்ட இந்த சர்வதேச நிறுவனத்தில் இணைந்துள்ளமை விசேட அம்சமாகும்.

இந்த மூலோபாய கைகோர்ப்பினூடாக, இலங்கையில் GlobalCom PR Network இன் பிரதிநிதியாக Mark and Comm திகழ்வதுடன், மேம்படுத்தப்பட்ட சர்வதேச தொடர்பாடல் சேவைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதுடன், GlobalCom PR Network அங்கத்தவர்களுக்கு இலங்கையின் சந்தையை அணுகுவதற்கான நேரடி அணுகலையும் வழங்குகிறது. Mark and Comm தன்வசம் கொண்டுள்ள பல தசாப்த கால நிபுணத்துவம் மற்றும் ஆழமான துறைசார் பாண்டித்தியம் போன்றவற்றின் பலனை இந்த வலையமைப்பின் இதர நிறுவனங்களுக்கு பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். APAC பிராந்தியத்தில் உறுதியான பிரசன்னத்தைக் கொண்ட, உலகின் முன்னணி பொது ஊடக உறவுகள் முகவர் நிறுவனங்களுடன் பிரத்தியேகமற்ற கைகோர்ப்புகளை Mark and Comm ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் வியாபாரங்கள் தமது சர்வதேச பிரசன்னத்தை விரிவாக்கம் செய்ய எதிர்பார்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் இந்த பங்காண்மை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், சர்வதேச வர்த்தக நாமங்கள் மற்றும் நிறுவனங்கள் தெற்காசிய மூலோபாய மையத்தில் நிலவும் வாய்ப்புகள் பற்றி கவனம் செலுத்தும் தறுவாயில் இந்த கைகோர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

GlobalCom PR Network இன் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் ஸ்தாபகர் ரால்ஃப் ஹார்ட்மன் கருத்துத் தெரிவிக்கையில், “வலையமைப்பில் முகவர் நிறுவனத்தை இணைத்துள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். Mark and Comm பெருமளவு மூலோபாய சிந்தனை அனுபவத்தை கொண்டுள்ளதுடன், தெற்காசிய தொடர்பாடல் கட்டமைப்பு தொடர்பான ஆழமான புரிதலையும் கொண்டுள்ளது.’’

‘‘இலங்கையின் முன்னணி பொது ஊடக உறவுகள் முகவர் நிறுவனம் எனும் அவர்கள் கொண்டுள்ள கீர்த்தி நாமம் மற்றும் பரந்த துறைகளில் பொது உறுவுகள் மற்றும் நிலைபேணல் தொடர்பில் முன்னெடுத்திருந்த பிரச்சாரத் திட்டங்கள் போன்றன, எமது சர்வதேச குடும்பத்தில் அவர்களை பெறுமதி வாய்ந்த உள்ளடக்கமாக இணைத்துக் கொள்ள உதவியிருந்தது. இலங்கையிலுள்ள எமது புதிய பங்காளரான Mark and Comm'இன் நிபுணத்துவத்தினூடாக, இந்த முக்கியத்துவம் வாய்ந்த சந்தையில் எமது வலையமைப்பின் ஆற்றல்களை பெருமளவு மேம்படுத்துவதற்கு முக்கிய பங்காற்றும் என நாம் நம்புகிறோம்.” என்றார்.

GlobalCom PR Network, 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் நிரூபிக்கப்பட்ட வெற்றிகரமான அனுபவம் கொண்ட 1,400-க்கும் அதிகமான அனுபவமிக்க பொது உறவுகள் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பாடல் ஆலோசகர்களை உள்ளடக்கிய, உலகளாவிய பொது உறவுகள் நிறுவனங்களின் வலைப்பின்னலாகச் செயல்படுகிறது. பல-சந்தை பொது உறவுகள் அணுகுமுறையில் மிகவும் நிரூபிக்கப்பட்ட உத்தியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான இந்த வலைப்பின்னலின் நோக்கம், மூலோபாய ரீதியிலான, முடிவுகளை மையமாகக் கொண்ட தகவல் தொடர்பு தீர்வுகளை வழங்கும் Mark and Comm நிறுவனத்தின் கொள்கையுடன் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது.

Mark and Comm இன் முகாமைத்துவ பணிப்பாளர் தன்சில் தாஜுதீன் கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச சந்தையை அணுகுவதற்கான ஒப்பற்ற வாய்ப்பை இந்த பங்காண்மை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை சந்தைக்கு சர்வதேச சிறந்த செயன்முறைகளை கொண்டு வருவதற்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. எமது பிரத்தியேகமான வழிமுறையுடன், GlobalCom இன் சர்வதேச சென்றடைவு ஆகியவற்றுடன் சகல துறைகளையும் சேர்ந்த எமது வாடிக்கையாளர்களுக்கு அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கும்.” என்றார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “எல்லைகளைக் கடந்து நிற்கும் கதை சொல்லும் கலையின் (storytelling) சக்தியில் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த கூட்டுறவானது, உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், உள்ளூர் மட்டத்தில் எதிரொலிக்கும் கதைகளை உருவாக்கும் எங்கள் திறனை மேலும் மேம்படுத்துகிறது. இது, இலங்கையின் கதைகளை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்வதுடன், சர்வதேச வர்த்தக நாமங்கள் எமது தனித்துவமான சந்தை இயக்கவியலைப் (unique market dynamics) புரிந்துகொள்ளவும், அதனுடன் தொடர்புபடுத்தவும் உதவுகிறது.” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X