2025 ஜூலை 19, சனிக்கிழமை

Motha இரட்டை லேயர் புடிங் கலவை தயாரிப்புகள் அறிமுகம்

Editorial   / 2018 ஒக்டோபர் 24 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

Motha கொஃபெக்ஷனரி வேர்க்ஸ் (பிரைவட்) லிமிடெட், இலங்கை சந்தையில் மோதா இரட்டை லேயர் புடிங் கலவை தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.

பாதாம் சொக்லேட் (Almond Chocolate), மின்ட் சொக்லேட் (Mint Chocolate) இரண்டு புதிய தெரிவுகளில் இந்த புதிய புடிங் கலவைகள் விற்பனையாகின்றன.  

தனது ஈற்றுணவு தெரிவுகளில் புத்தாக்கமான தெரிவுகளை உள்வாங்கியிருந்தமைக்கு மேலதிகமாக, ஆழமான ஆய்வுகள், கருத்துக்கணிப்புகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டிருந்த பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு, இந்த இரட்டை லேயர் புடிங் கலவை தெரிவுகளை அறிமுகம் செய்துள்ளது. 

உள்நாட்டு சந்தையில் 80 சதவீதத்துக்கும் அதிகமான பகுதியை தன்வசம் கொண்டுள்ள Motha, கடந்த ஆண்டுகளில் துரித விரிவாக்கல் நடவடிக்கைகளினூடாக இந்த நிலையை எய்தியுள்ளது.  

Motha கொஃபெக்ஷனரி வேர்க்ஸ் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நிஹால் விஜேரட்ன, இந்தப் புதிய தெரிவுகள் அறிமுகம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், “சந்தை ஆய்வுகள், கருத்துக் கணிப்புகள், நேர்த்தியான கருத்துகளைத் தொடர்ந்து, இந்தப் புத்தாக்கமான சிந்தனையை நிறைவேற்ற நாம் தீர்மானித்தோம். இந்த இரட்டை லேயர் புடிங் கலவை தெரிவுகள் என்பது, நாட்டில் இதுவரையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதலாவது இரட்டை லேயர் புடிங் தெரிவாக அமைந்துள்ளது. தொடர்ச்சியாக முன்னேறி, எமது வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் புதிய தயாரிப்பை வழங்க வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது”  என்றார்.  

Motha கொஃபெக்ஷனரி வேர்க்ஸ் பணிப்பாளரும் பொது முகாமையாளருமான ஏட்ரியன் ஃபொன்சேகா இந்த புதிய தயாரிப்புகளின் அறிமுகம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “மோதா ஒரு வர்த்தக நாமமாக இலங்கையர்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், சந்தையில் உறுதியான நிலையைப் பேணி வருகிறது. எமது தயாரிப்புகளுக்கு நாம் பிரத்தியேகத் தன்மையை வழங்கியுள்ளதுடன், இரட்டை லேயர்கள் கொண்ட புடிங் கலவையை அறிமுகம் செய்துள்ளோம்” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X