Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூலை 08 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
GYM சொலூஷன் கம்பனியால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ‘Mr. Novice - 2018’ உடற்கட்டுப் போட்டிக்கு முழுமையான அனுசரணையை வழங்க RS Steel நிறுவனம் முன்வந்திருந்தது. RS Steel நிறுவனம், RS QST RB 500 உருக்கிரும்புக் கம்பிகளை உற்பத்தி செய்து வருகிறது.
‘Mr. Novice - 2018’ உடற்கட்டுப் போட்டியை இலங்கை உடற்கட்டு மற்றும் உடற்பயிற்சி சம்மேளனம் (SLBBPFA) மேற்பார்வை செய்திருந்ததுடன், Hall de Galleஇல் இடம்பெற்றது. 55 கிலோகிராமிலிருந்து 85 கிலோகிராம் வரையான எடைப் பிரிவுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
‘Mr. Novice - 2018’ வெற்றியாளராக தினுக ஹர்ஷன (பவர் சக் ஜிம் - மாவத்தகம) தெரிவு செய்யப்பட்டிருந்தார். இவருக்கு, வெற்றியாளருக்கான பதக்கம், சான்றிதழ், 100,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது. 02ஆம், 03ஆம் இடங்களை நிரஞ்ஜன் குமார (சக்தி ஜிம் - வத்தளை), துலங்க மதுஹன்ஸ (சிமாத்ரா ஜிம் - பத்தரமுல்ல) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
RS Steel கம்பனியின் தலைவர், ரமேஷ் சிவலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதில் பங்களிப்பு வழங்க RS Steel கம்பனி தன்னை அதிகளவு ஈடுபடுத்தியுள்ளது. நாட்டின் நகருக்கு அப்பாற்பட்ட மற்றும் கிராமிய மட்ட விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்துடன், இந்தப் பகுதிகளுக்கும் விளையாட்டுக்களை கொண்டு செல்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
9 hours ago