S.Sekar / 2022 பெப்ரவரி 11 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
Multilac, 2021 தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளத்தின் விருதுகளில் பல விருதுகளை தனதாக்கியிருந்தது. அண்மையில் இடம்பெற்ற இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில், பெரிய பிரிவில் தங்க விருதையும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் சிறந்த செயற்பாட்டாளருக்கான விருதையும் Multilac வென்றுள்ளது.

தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் ஏற்றுமதி விருதுகள் என்பது இலங்கை ஏற்றுமதியாளர்களின் சிறந்த செயற்திறனை அங்கீகரித்து அவர்களுக்கு வெகுமதி அளிப்பதற்காக தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்படுகின்ற முதன்மை நிகழ்வாகும். இந்த பல விருதுகள் Multilac> சர்வதேச சந்தைகளைக் கைப்பற்றும் உயர்தர வர்ணப்பூச்சு உற்பத்தியாளராகவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மூலம் புத்தாக்கத்திற்கான அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளமையையும் எடுத்துக் காட்டுகின்றன.
Multilac தனது 40 வருட கால பயணத்தின் போது, இலங்கையில் வர்ணப் பூச்சுக்கள் மற்றும் மேற்பரப்பு பூச்சுகள் துறையில் உச்சத்தை எட்டியுள்ளது. Macksons குழுமத்தின் பாரம்பரிய வர்த்தக நாமமாக, வருடத்தின் சிறந்த ஏற்றுமதி வர்த்தக நாமம், சிறந்த இலங்கை நிறுவனம் மற்றும் ஜனாதிபதி ஏற்றுமதி விருது உட்பட கடந்த பல வருடங்களாக எண்ணற்ற விருதுகளை Multilac வென்றுள்ளது. வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் புத்தாக்கத்தின் மீதான அர்ப்பணிப்புக்காக அதன் ஈடிணையற்ற நற்பெயருடன், Multilac தயாரிப்புகள் வலுவான சர்வதேச சந்தைகளில் பிரபலமடைந்துள்ளன.
Macksons Paints Industries பணிப்பாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மிஸ்ஹா மிஸ்வர் இஸ்மாயில் கருத்து வெளியிடுகையில், “Multilac ஒரு பெருமைமிக்க இலங்கை வர்த்தக நாமம் என்பதை நாங்கள் எப்போதும் உரத்து எடுத்துரைத்து வருகிறோம். எங்கள் தாய்நாட்டிற்கு உலகளாவிய அங்கீகாரத்தையும் பெருமையையும் கொண்டு வருவதற்கு எல்லைகளைத் தாண்டி எமது தயாரிப்புக்களைக் கொண்டு சென்றுள்ளோம். எனவே, தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் அங்கீகாரத்தை தொடர்ந்து பெறுவது ஒரு மகத்தான கௌரவம். இந்த ஆண்டு தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் விருதுகளின் கருப்பொருள் 'எழுச்சி பெறல், மீளக் கட்டியெழுப்பல் மற்றும் மீண்டும் அடையப் பெறல்', என்ற காரணத்தால் Multilac இந்த பாராட்டுகளை வென்றுள்ளமை, தொற்றுநோயால் எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியிலும் உயர்ந்த சர்வதேச தராதரங்களை பேணிப் பராமரிப்பதில் எங்களின் விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புக்கான சான்றாகும்,' என்று குறிப்பிட்டார்.
விருதுகளை வழங்கும் போது, தேசிய ஏற்றுமதியாளர் சபை பணியாளர்கள், இலாபம் மற்றும் பூமி போன்ற வணிகத்தின் பல்வேறு முக்கிய அம்சங்களை அங்கீகரிக்கிறது. Macksons தனது பணியாளர்களின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் இலங்கையில் குறைந்தபட்சம் தலா 5,000 ரூபாய் சம்பள அதிகரிப்பை அறிவித்த ஒரே தனியார் நிறுவனமாக மாறியுள்ளது. இக்குழுமம் வெற்றிகரமான மற்றும் நல்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்களின் சிறப்பான அடிச்சுவட்டையும் கொண்டுள்ளது. மிக அண்மையில், கொவிட் பரவிய சமயத்தில் மருத்துவப் பொருட்களைப் பெரிய அளவில் நன்கொடையாக அளித்தது மற்றும் ஒட்டுமொத்த தேசத்தின் நலனுக்காக நச்சுத்தன்மையற்ற இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தது ஆகியவற்றை குறிப்பிட்டுக் கூற முடியும்.
28 Oct 2025
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 Oct 2025
28 Oct 2025