Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 மார்ச் 20 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய அபிவிருத்தி வங்கி தனது வருடாந்த நிதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையானது, மதிப்பாய்வுக்குட்பட்ட காலப்பகுதியில் (2016) வங்கி முன்னெடுத்த நிதி மற்றும் நிதி சாரா செயற்பாடுகள் குறித்த முழுமையான அறிக்கையிடலாக அமைந்துள்ளது. இந்த அறிக்கை, வங்கி புதியத் தலைமைத்துவத்தின் கீழ் எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது என்பது குறித்த பிரதிபலிப்புகளையும், எங்கள் சாத்தியங்களைக் கட்டவிழ்ப்பதன் ஊடாக உங்கள் தடைகளைத் தகர்த்தெறிதல் என்ற கருத்தாக்கத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையில், NDB, எவ்வாறு தனி நபர்கள், சிறிய மட்ட தொழின்முனைவோர் முதல் சிறப்புநிலை பெருநிறுவனங்கள் வரை தமது பாரியளவான பெரும்பான்மை வாடிக்கையாளர்களை எவ்வாறு அடைந்தது என்பதையும், அவர்கள் தமது முழுமையான சாத்தியங்களை கட்டவிழ்க்கும் வகையில் வங்கி எவ்வாறு துணை புரிந்தது என்பது குறித்தும் ஒரு கதை போல வாசகர்களுக்குத் தெரிவிக்கின்றது. இந்த அறிக்கையின் ஊடாக முழுமையான நிதிச்சேவைகள் வழங்குநர் என்ற வகையில் வங்கியியல் மற்றும் நிதிச்சேவைகளை அளிப்பதுடன், ஒரு தொகுதி முதலீட்டு சந்தை தீர்வுகளையும் அதன் குழும நிறுவனங்கள் ஊடாக அளிக்கும் வங்கியின் வலுவான சந்தை இடம் குறித்தும் வாசகர்கள் அறிந்துகொள்ள முடியும்.
வங்கியின் அறிக்கையானது, முழுமையான இணக்கப்பாடு மற்றும் ஒழுங்கமைப்பு வெளிப்படுத்தல்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன், தெளிவுத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் அறிக்கையிடலில் ஸ்திரத்தன்மையினை பேணுதல் போன்றவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது, வங்கி 2013ஆம் ஆண்டு ஆரம்பித்த பயணத்தின் விளைவாக விளங்கும், வங்கியின் நான்காவது ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கையாகத் திகழ்கின்றது.
22 minute ago
23 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
23 minute ago
30 minute ago