2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

NYC உடன் SHMA கைகோர்ப்பு

Freelancer   / 2023 நவம்பர் 24 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

விருந்தோம்பல் துறையில் நாளையை தலைவர்களை நிலைநிறுத்தச் செய்யும் குறிக்கோளுடன் அவர்களின் திறன்கள் மற்றும் திறமைகளை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கையின் இளைஞர்களை ஊக்குவித்து அவர்களை வலுவூட்டும் நோக்குடன், ஏ.பவர் அன்ட் கம்பனி பிரைவட் லிமிடெட் நிறுவனத்தின் சுவிஸ் ஹோட்டல் மனேஜ்மன்ட் அகடமி பிரைவட் லிமிடெட் (SHMA), இலங்கை தேசிய இளைஞர் படையணியுடன் (NYC) புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் அண்மையில் கைச்சாத்திட்டது.

விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை தேசிய இளைஞர் படையணி, நிலைபேறான வளர்ச்சிக்கான திறன்கள் (SSG) செயற்திட்டத்தின் பயிற்றுவிக்கும் பங்காளராக இயங்கும். இந்த செயற்திட்டம், பவர் மற்றும் அபிவிருத்தி மற்றும் ஒன்றிணைவுக்கான சுவிஸ் முகவர் (SDC) அமைப்பு, சுவிட்ஸர்லாந்தின் வெளி விவகார செயற்பாடுகளுக்கான சர்வதேச ஒன்றிணைவுக்கான பெடரல் திணைக்களம் ஆகியவற்றுக்கிடையிலான அரச மற்றும் தனியார் துறை பங்காண்மையாக அமைந்துள்ளது.

2002 ஆம் ஆண்டு முதல் இளைஞர் அபிவிருத்திக்காக அர்ப்பணிக்கப்பட்ட அரச ஸ்தாபனமாக NYC திகழ்வதுடன், நாடு முழுவதிலும் 58 பயிற்சி நிலையங்களைக் கொண்டுள்ளது. தனது பிரத்தியேகமான பயிற்சி மாதிரிகளினூடாக இளைஞர்களை ஊக்குவித்து, வழிநடத்தி, தயார்ப்படுத்தி அவர்களுக்கு அவசியமான மென் திறன், கல்விசார், தொழிற்பயிற்சி, பொழுதுபோக்கு மற்றும் சமூக அடிப்படையிலான பயிற்சிகளை வழங்குகின்றது. 2014 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட தம்புளையிலுள்ள La Hotelier என்பதை NYC நிர்வகிப்பதுடன், இந்த பெருமைக்குரிய ஹோட்டல் பாடசாலையில் பயின்ற பல பட்டதாரிகள் இலங்கையின் முன்னணி ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கேட்போர்கூடத்தில் ஒக்டோபர் 17ஆம் திகதி இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. SHMA மற்றும் பவர் சார்பாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி/முகாமைத்துவ பணிப்பாளர் ரொல்ஃப் பிளாசர், நிதியியல் மற்றும் ஒழுக்கச் செயற்பாடுகள் பணிப்பாளர் பவித்ரா சமரசிங்க, கல்வி மற்றும் சுற்றுலா பொது முகாமையாளர் டனியெலா முனசிங்க, SHMA முகாமையாளர் சுரீகா பெர்னான்டோ, செயற்திட்ட தலைவர் செரில் ஆர்ன்ட் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். NYC இலிருந்து அதன் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜீவ ரத்நாயக்க, பயிற்சி மற்றும் அபிவிருத்திக்கான மேலதிக பணிப்பாளர் சமன் குலசூரிய, மத்திய மாகாண பணிப்பாளர் மேஜர். அசோக விஜேரட்ன மற்றும் அபிவிருத்திக்கான உதவி பணிப்பாளர் இனோகா குணவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கௌரவ அமைச்சர் ரொஷான் ரணசிங்க உடன் இலங்கையிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பிரதி தலைவர் ஒலிவர் பிராஸ் மற்றும் முதல் செயலாளர் டொரிஸ் மேனர் கலந்து கொண்டனர்.

SSG செயற்திட்டத்தினூடாக 2025 ஆம் ஆண்டளவில் 2,240 திறன் படைத்த இளம் ஆண்கள் மற்றும் பெண்களை உருவாக்க எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் விருந்தோம்பல் துறை கல்வியில் பெண்கள் பங்குபற்றலை 40% ஐ அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகின்றது. பல்வேறு ஹோட்டல்களில் தொழில் பயிற்சிகளுடன் தொழில்களில் ஈடுபடுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்தமாக எட்டு SSG நிலையங்களை திறப்பதற்கு SHMA திட்டமிட்டுள்ளது.

NYC க்கும், விருந்தோம்பல் துறை மற்றும் ஒட்டு மொத்த பொருளாதாரத்துக்கும் பெருமளவில் பங்களிப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படும் சுவிஸ் தொழிற்பயிற்சி திறன் விருத்தி (VSD) பாடவிதானமொன்றை பிரயோகிப்பதற்கு இந்தத் திட்டத்தினூடாக எதிர்பார்க்கப்படுகின்றது. SHMA ஐச் சேர்ந்த பரந்தளவு அனுபவம் வாய்ந்த நிபுணர்களால், NYC இல் இந்த கற்கைக்கு ஆதரவளிக்கப்படும் என்பதுடன், திறன் படைத்த தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பும் வழங்கப்படும். அத்துடன், NYC இனால் தொடர்ந்தும் SSG செயற்திட்டத்துக்கு ஆதரவளிக்கப்படும்

SHMA இனால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்விலிருந்து பெறப்பட்ட பெறுபேறுகள் தொடர்பில் கல்வி மற்றும் சுற்றுலா பொது முகாமையாளர் டனியெலா முனசிங்க விளக்கமளித்திருந்தார். “இந்த கற்கையை பூர்த்தி செய்தவர்களில் 92.3% ஆன மாணவர்கள் தமது தற்போதைய தொழிலில் அல்லது புதிய நிறுவனத்தில் பதவி உயர்வுகளைப் பெற்றுக் கொண்டனர், 5 நட்சத்திர ஹோட்டல்களில் 75% க்கு அதிகமானவர்கள் பணியாற்றுகின்றனர்.” என்றார்.

EHL நிகழ்ச்சித்திட்டத்தின் VET ஐ பூர்த்தி செய்த SHMA மாணவர்களுக்கு தமது வருமானத்தில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பை பெற்றுக் கொள்ள முடிந்தது. மாதாந்தம் 50000 ரூபாய்க்கு குறைந்த வருமானம் பெற்றவர்கள் தற்போது 100000க்கு அதிகம் வருமானம் பெறுகின்றனர். சுமார் 64% ஆனவர்கள் 200000க்கு அதிகமான சம்பளம் பெறுகின்றனர். பல்வேறு ஹோட்டல்களுடன் நாம் இணைந்துள்ளதுடன், CIPM மற்றும் நெஸ்லே உடன் பங்காண்மைகளையும் ஏற்படுத்தியுள்ளோம்.” என்றார்.

சர்வதேச நியமங்களின் பிரகாரம் உயர் கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் கல்வி நிலையமாக SHMA திகழ்வதுடன், உயர் தகைமை வாய்ந்த ஹோட்டல்துறையாளர்களையும் தயார்ப்படுத்துகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X