2025 ஜூலை 26, சனிக்கிழமை

Needle Painting Exhibition 2017

Princiya Dixci   / 2017 மே 08 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள ஜே.டீ.ஏ. பெரேரா கலையரங்கத்தில் அண்மையில் நடைபெற்ற Needle Painting Exhibition என்ற பூத்தையல் அலங்கார கண்காட்சி நிகழ்வுக்கு அனுசரணையளிக்க சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனம் முன்வந்திருந்தது சிங்கர் Fashion Academy இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது. நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து Fashion Academy கிளைகளிலும் பூத்தையல் அலங்கார பாடநெறியைப் (Needle Painting Course) பின்தொடரும் மாணவர்கள் மத்தியில், அவர்களின் மிகச் சிறந்த கலைப் படைப்புக்கள் ஒன்றுதிரட்டப்பட்டு, இக்கண்காட்சி நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

தையல் ஊசியை பயன்படுத்தி ஆக்கப்படும் இழை அலங்காரம் எனப்படுகின்ற தையல் அலங்காரமானது, நீண்ட மற்றும் குறுகிய தையல் வேலைப்பாடுகளை உபயோகித்து யதார்த்தபூர்வமான ஓவியங்களின் கலப்பினைக் கொண்ட பூத்தையல் நுட்பமாகும். மாணவர்கள் தமது திறன்களை பயன்படுத்தி ஆக்கியுள்ள படைப்புக்களை காட்சிப்படுத்தும் வாய்ப்புக்களை மேம்படுத்துவது மட்டுமன்றி, பொதுமக்கள் அவர்களின் திறமைகளை இனங்கண்டு, அவர்களின் படைப்புக்கள் கொள்வனவு செய்வதை ஊக்குவிப்பதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாகும்.

இந்த ஆண்டு கண்காட்சி தொடர்பில் Singer Business School எடுத்துள்ள நிலைப்பாடு தொடர்பில் Singer Business School இன் மேலாளரான கோஷpத பெரமுனுகமகே கருத்துத் தெரிவிக்கையில்,

'இந்த தையல் கலைப் பிரிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உதவி, எமது மாணவர்கள் புதிய திறன்களை விருத்தி செய்து, தமது சாதனைகளை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் இந்த கண்காட்சியின் மூலமாக நிலைபேண் முயற்சியில் கால்பதித்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.

மாணவர்களின் படைப்புக்களை நேரடியாக கண்டு, அவற்றை கொள்வனவு செய்யும் வாய்ப்புக்கள் வாடிக்கையாளர்களை இலகுவில் அடையப்பெறும் வாய்ப்பினை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதே எமது நோக்கமாகும். இது அவர்களுக்கு தொழில் முயற்சிகளுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்த உதவுவது மட்டுமன்றி, இத்தகைய கண்காட்சி நிகழ்வுகளின் மூலமாக கிடைக்கப்பெறும் பல்வேறு வழிமுறைகளை உபயோகித்து சர்வதேச அளவில் இத்துறை சார்ந்தவர்களை எட்டுவதற்கும் உதவுகின்றது,' என்று குறிப்பிட்டார்.

1877 ஆம் ஆண்டு, புறக்கோட்டையில் ஒரு சிறு அளவிலான விற்பனை நிலையத்துடன் சிங்கர் தையல் இயந்திரத்தை சிங்கர் அறிமுகப்படுத்தி வைத்திருந்தது. தாங்கள் உற்பத்தி செய்கின்ற தையல் இயந்திரங்களை விற்பனை செய்வதுடன் மட்டும் நின்றுவிடாது, வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்கின்ற உற்பத்திகள் மற்றும் சாதனங்கள் தொடர்பில் அவர்களுக்கு அறிவூட்டும் முயற்சிகளையும் சிங்கர் முன்னெடுத்து வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X