Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 பெப்ரவரி 02 , பி.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச தரவு குழுமத்திடமிருந்து (IDG) இரு கௌரவிப்புகளை OPPO தனதாக்கியிருந்தது. அண்மையில் லாஸ் வெகாஸ் நகரில் நடைபெற்ற வருடாந்த நுகர்வோர் இலத்திரனியல் கண்காட்சியில் இந்தக் கௌரவிப்புகளைப் பெற்றிருந்தது.
2016 -2017 காலப்பகுதியின் சிறந்த சர்வதேச ஸ்மார்ட்ஃபோன் வர்த்தக நாமமாகவும், சிறந்த ஸ்மார்ட் இணைக்கப்பட்ட சாதனங்கள் வர்த்தக நாமமாகவும் OPPO தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தரவு குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பட்ரிக் கெனலி (Patrick Kenealy) மேற்கொண்டிருந்த அறிவித்தலில் குறிப்பிட்டிருந்தார்.
கெனலியின் கருத்துக்களின் பிரகாரம், தொழில்நுட்ப தலைமைத்துவம் மற்றும் வளர்ந்துவரும் வெற்றிகரத்தன்மை போன்றன OPPO அடங்கலாக ஸ்மார்ட்ஃபோன் தெரிவுகளில் 2016ஆம் ஆண்டில் சர்வதேச விஸ்தரிப்பு நடவடிக்கைகளின் போது சிறந்த சர்வதேச நீடிப்பைப் பெற்றிருந்தன.
இந்த வர்த்தக நாமங்களை அவர் புகழ்ந்திருந்ததுடன், இவை தொடர்ச்சியான மாற்றமடைந்து வருவதுடன், புத்தாக்கத்தின் பிரகாரம் மேம்படுத்தப்படுகிறது என குறிப்பிட்டிருந்தார். தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் ஈடுபாடு மற்றும் பாவனையாளர் அனுபவம் ஆகியவற்றின் பிரகாரம் இந்த மதிப்பீட்டின் போது வர்த்தக நாமங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன.
நிறுவனத்தின் சார்பாக கௌரவிப்பை பெற்றுக்கொண்ட OPPO தொழில்நுட்ப திட்டமிடல் பணிப்பாளர் லுமா லு (Luma Lu) கருத்துத் தெரிவிக்கையில், “உலகளாவிய ரீதியில் காணப்படும் எமது பாவனையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தும் வகையிலான புத்தாக்கமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சாதனங்களை வடிவமைக்கும் எமது அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்கு IDG இடமிருந்து கிடைத்த இந்தக் கௌரவிப்பையிட்டு OPPO மிகவும் பெருமையடைகிறது. 2017இல், பாவனையாளர்களின் அசல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஸ்மார்ட்ஃபோன்களை உற்பத்தி செய்வது தொடர்பில் நாம் தொடர்ச்சியாக எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவோம் என்பதுடன், ஒவ்வொரு விவரங்களிலும் எமது செயற்பாடுகளை உன்னிப்பாக ஈடுபடுத்துவோம்”என்றார்.
“சர்வதேச சிறந்த வர்த்தகநாமங்கள்” வைபவம் அமெரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச தரவு குழுமத்தினால் (IDG) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு ஆய்வு முகவர் சர்வதேச தரவு கூட்டாண்மை அமைப்பு (IDC) முழு பங்களிப்பை வழங்கியிருந்தது. இந்த ஆண்டு 11ஆவது தடவையாக IDGஇனால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், நுகர்வோர் இலத்திரனியல் துறையில் சர்வதேச வர்த்தக நாமங்கள் வகிக்கும் உயர்ந்த நிலையைக் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .