Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஓகஸ்ட் 05 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் கொமர்ஷல் வங்கி, தமது நிதி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பசுமை இல்ல வாயு (GHG) வெளியேற்றத்தை அளவிடுவதற்கும், வெளிப்படுத்துவதற்கும் உதவும் உலகளாவிய முயற்சியான காபன் கணக்கியல் நிதியியலுக்கான பங்குடைமை அமைப்புடன் [Partnership for Carbon Accounting Financials - (PCAF)] கையெழுத்திட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக மாறியுள்ளது.
ஏற்கனவே அதன் செயல்பாடுகளின் அடிப்படையில் 100% காபன் நடுநிலை சான்றளிக்கப்பட்டுள்ளது, PCAF உடனான கொமர்ஷல் வங்கியின் சிறந்த ஈடுபாடானது சர்வதேச நிதியியல் கூட்டுத்தாபனத்தால் (IFC) ஆதரிக்கப்படுவதுடன் மற்றும் இது வங்கியின் காலநிலை மாற்றத் திட்டத்தின் முக்கிய அங்கமாகும் என்று வங்கி தெரிவித்துள்ளது.
PCAF ஆனது நிதியியல் துறைகளின் காபன் தடயத்தை அளவிடுவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் பொதுவான வழிமுறையை வழங்குகிறது. இந்த முறையானது உலகளாவிய GHG கணக்கியல் மற்றும் அறிக்கையிடல் தரநிலையால் குறிப்பிடப்பட்டுள்ள நிதிசார்ந்த உமிழ்வுகள், எளிதாக்கப்பட்ட உமிழ்வுகள் மற்றும் காப்புறுதி தொடர்புடைய உமிழ்வுகள் ஆகியவை சார்பாக பல்வேறு நிதி நிறுவனங்களில் நிலையான அறிக்கையிடலை செயல்படுத்துகிறது.
'கொமர்ஷல் வங்கியில், உலகளாவிய சிறந்த நடைமுறைகள் எங்கள் செயல்களுக்கு ஊக்கமளிக்கின்றன, குறிப்பாக எங்கள் நிலைபேண்தகைமையுடன் இணைக்கப்பட்ட முயற்சிகளுக்கு உந்துதலாக உள்ளன' என்று வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி சனத் மனதுங்க தெரிவித்தார். 'சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை அம்சங்களில் முழுமையான அணுகுமுறையை கடைப்பிடிக்க, எங்கள் கடனளிப்பின் தாக்கங்களை மதிப்பிடுவதன் மூலம், சுற்றுச்சூழல் நட்பு செயல்பாடுகளின் எல்லைகளை விஸ்தரிப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். கார்பன் கணக்கியல் நிதியியலுக்கான பங்குடைமையுடன் எங்கள் ஒத்துழைப்பு இந்த பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் எட்டுகிறது. இந்த முயற்சியில் வழங்கி வரும் விலைமதிப்பற்ற வழிகாட்டுதல் மற்றும் ஆதரவிற்காக IFC நிறுவனத்துக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.' என்றார்.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago