2025 மே 21, புதன்கிழமை

PIBT கல்வியகம் Leeds Trinity பல்கலைக்கழகத்துடன் கைகோர்ப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கல்வி வழங்குநரான முன்னணி வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கல்வியகம் (PIBT), கிறீன்வீச் பல்கலைக்கழகத்துடனான பங்காண்மையில் 12 வருடப் பூர்த்தியை கொண்டாடுவதுடன், அதன் கல்வித் தகைமை மற்றும் MBA கற்கைகளின் உள்ளடக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் Leeds Trinity பல்கலைக்கழகத்துடன் பங்காண்மையை உருவாக்கிக் கொண்டுள்ளது.  

இவ்வாறாக, வெற்றிகரமாக இயங்கி வரும் இலங்கையிலுள்ள ஒரேயொரு கல்வி நிறுவகமாக PIBT திகழ்கிறது. இந்த உறுதியான பங்காண்மை மூலமாகக் கடந்த காலங்களில், PIBT மாணவர்களுக்குத் தங்கள் தொழில்சார் கல்வி நோக்கங்களைப் பூர்த்திசெய்து கொள்ள வழிவகுத்துள்ளது.   

கிறீன்வீச் பல்கலைக்கழகம், பல்வேறு துறைகளில் உயர் கல்வியைப் பெறுவதற்கான வளமான பின்னணியை மாணவர்களுக்கு வழங்கி வருவதுடன், பல்கலைக்கழகம் உருவாக்கி வரும் உயர் தகைமையும் பணிக்கேற்ற பட்டதாரிகளும் இதற்குச் சான்று பகர்வதாக அமைந்துள்ளது.   

இந்தப் புதிய பங்காண்மை மூலம் Leeds Trinity பல்கலைக்கழகத்தில் 6 மாத கால உள்ளக கற்கையைத் தொடர்வதற்கு PIBT மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக, இப்பங்காண்மை மூலமாக திட்ட முகாமைத்துவ உள்ளடக்கத்தின் புதிய MBA கற்கைநெறியும் வசதிப்படுத்தப்பட்டுள்ளது.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .