2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

PediaSure புதிய பொதியில் அறிமுகம்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகத்தரம் வாய்ந்த PediaSure சிறுவர் சத்துணவைப் புதுத்தோற்றத்துடன் இலங்கை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதாக PediaSure உற்பத்திகளை மேற்கொள்ளும் Abbott Nutrition நிறுவனத்தின் உள்ளூருக்கான ஒரே முகவர் நிறுவனமான CIC நிறுவனம் அறிவித்துள்ளது.

PediaSure புதிய பொதியை அறிமுகப்படுத்தும் வைபவம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றது. அந்த வைபவத்துக்கு CIC Holdings  Abbott Nutrition நிறுவனத்தின் தெற்;கு ஆசிய வலயத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.     

இதன்போது கருத்துத் தெரிவித்த CIC Pharmaceuticals நிறுவனத்தின் பணிப்பாளர் டபிள்யூ.எஸ்.பிரேம்குமார்  'மக்களுக்கு நன்மை தரும் உற்பத்திகளை மேற்கொள்ளும் உள்ளூர் நிறுவனமே CIC ஆகும். உலகின் பாரிய மருந்து மற்றும் சத்துணவு உற்பத்தி நிறுவனமான Abbott Nutrition  நிறுவனத்தின் PediaSure உற்பத்திகள் புதிய பொதியிடல் ஊடாக விசேட விலைக்கு அறிமுகப்படுத்த கிடைத்தமை மகிழ்ச்சியானது. இந்தப் பொதியிடல் ஊடாகப் பாவனையாளர்கள் அனைவருக்கும் தமது பிள்ளைகளுக்கு உரிய ஊட்டச்சத்தைத் தமக்கேற்ற விலைக்குக் கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது' என்றார்.  

6 புதிய பொதியிடல் மூலம் வெளிவந்துள்ள, PediaSure மேலதிக போஷாக்கானது வெனிலா மற்றும் சொக்கலட் சுவைகளிலும் உள்ளதுடன், நாட்டிலுள்ள பிரதான கடைகளில் அவற்றைக் கொள்வனவு செய்ய பாவனையாளர்களுக்குச் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.  

1 முதல் 10 வயது வரையான சிறுவர்களுக்கு முழுமையான மற்றும் சமமான போஷாக்கை வழங்கும் PediaSure பால் கிளாஸ் ஒன்றின் ஊடாக சிறுவர்களின் போஷாக்கிற்கு தேவையான புரதம் உள்ளிட்டவைக் கிடைப்பதால் சிறுவர்களின் உயரம், பாரம், சரீரம் மற்றும் மூளை வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு இன்றியமையாதது.  

இதன்போது கருத்துத் தெரிவித்த Abbott Nutrition நிறுவனத்தின் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் மற்றும் மாலைத்தீவு தொடர்பான சிரேஷ்ட முகாமையாளர் சுபாதோஷ் சௌத்ரி கருத்துத் தெரிவிக்கையில், PediaSure புதிய பொதியிடல் புதிய விலையின் கீழ் அறிமுகப்படுத்த காரணம், பாவனையாளர்களுக்கு PediaSure உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே. தற்போது சந்தையில் இருக்கும் புதிய PediaSureபொதியிடலைக் கொள்வனவு செய்து தமது பிள்ளைகளுக்கு தேவையான போஷாக்கை வழங்க பெற்றோரால் முடியும்' என குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X