Editorial / 2020 ஜூன் 09 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச உறவுகள், மூலோபாய ஆய்வுக் கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையமானது, ' Port City SEZ - A Catalyst for Modern Services in Sri Lanka ' என்ற அறிக்கை தொடர்பில் இணைய மாநாடு (webinar) மூலமாகக் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தது. 'கொழும்பு துறைமுக நகரம்: இலங்கைக்கான சாத்தியமான வளர்ச்சி விளைவு' என்ற தலைப்பில் PwC Sri Lanka நடத்தியிருந்த இணைய மாநாட்டின் போதே, இந்த அறிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.
2014ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர செயற்றிட்டமானது, சுதந்திரத்துக்குப் பின்னரான 70 ஆண்டுகளுக்கும் மேலான, இலங்கையின் வரலாற்றில் மிக இலட்சியம் கொண்ட ஒரு வளர்ச்சித் திட்டமாகக் காணப்படுகின்றது. துறைமுக நகர விசேட பொருளாதார மண்டலத்தின் (Special Economic Zone - SEZ) நீண்ட கால போட்டித்திறன், இலங்கையில் சேவைகளால் வழிநடத்தப்படும் வளர்ச்சிக்கு, ஓர் ஊக்கியாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி, கலாநிதி கணேஷன் விக்னராஜா கலந்துரையாடினார்.
துறைமுக நகரத்தின் பரிணாமத்தை வடிவமைக்கக் கூடிய நவீன சேவைகள் மய்யம், சர்வதேசம், உள்நாட்டு பின்னணிகள், துறைமுக நகரத்துக்கான இலங்கையின் கொள்கை ஆட்சியை மேம்படுத்துவதற்கான நவீன, சேவைகள் சார்ந்ததும் ஸ்தாபிக்கப்பட்ட விசேட பொருளாதார மண்டலங்களில், இலங்கையின் நிலையமைப்புத் தொடர்பான நுண்ணறிவையும் சர்வதேச உறவுகள், மூலோபாய ஆய்வுக் கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையம் இங்கு ஆய்வு செய்கிறது.
கேந்திர முக்கியத்துவம் கொண்ட அமைவிடத்தின் அனுகூலத்தை மேம்படுத்துவதன் மூலமும், மற்ற இடங்களில் உள்ள விசேட பொருளாதார மண்டலங்களின் அனுபவங்களின் அடிப்படையில் எது பயன் தரும், எது பயன் தராது என்பதையும் ஆராய்ந்து, இலங்கை இரட்டை நன்மைகளைக் கொண்டுள்ளது என்று, இந்த அறிக்கை தெரிவிக்கிறது. கொவிட்-19 நிலைமைக்குப் பின்னரான சவால்மிக்க பொருளாதார சகாப்தத்தின் பின்னணியில், துறைமுக நகரம் காலப்போக்கில் வெற்றிபெற உகந்த தேசிய பொருளாதாரக் கொள்கைகளையும், போட்டித்திறன் கொண்ட விசேட பொருளாதார மண்டல கட்டமைப்பையும் ஏற்படுத்துவது குறிப்பிடத்தக்க வகையில் மேம்பட வழிகோலும் என, இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
துறைமுக நகரத் திட்டம் தொடர்பில், ஊடகங்கள் வாயிலாகக் கணிசமான அளவில் செய்திகள் பகர்ந்து கொள்ளப்பட்டுள்ள போதிலும், திட்டத்தின் சாத்தியமான பயணம் குறித்து, கல்வி, கொள்கை சார்ந்த ஆராய்ச்சிகள் குறைவாகவே உள்ளன.
இலங்கையில் பொருளாதார மேம்பாடு குறித்த அறிவு தொடர்பாகக் காணப்படும் இடைவெளியை நிரப்புவதற்கும், கொள்கை நுண்ணறிவுகளை வழங்குவதற்கும், துறைமுக நகரத்தின் நீண்டகால போட்டித்திறன் குறித்து, சுயாதீன ஆய்வை மேற்கொள்ளும் பணியைச் சர்வதேச உறவுகள், மூலோபாய ஆய்வுக் கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்திடம் CHEC Port City Colombo Pvt Ltd ஒப்படைத்துள்ளது.
41 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago