2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

RDB வங்கியின் வீட்டுக்கு வீடு’ சேமிப்பு முகவர் சேவை

Gavitha   / 2016 நவம்பர் 21 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மக்களின் இதயத்துடிப்பினை அறிந்து, அவர்களுக்கு தன்னம்பிக்கையளிக்கும் நோக்கில் பிரதேச அபிவிருத்தி வங்கிச் செயற்பாடுகளைப் புதிய வழிமுறைகளில் மேற்கொள்வதுடன், தன் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதனை மேலும் விஸ்தரிப்பதனை நோக்காகக் கொண்டு வாடிக்கையாளர்களை வங்கிக்கு வரவழைக்காமல் வங்கி வாடிக்கையாளர்களிடம் சென்று அவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் “RDB வீட்டுக்கு வீடு” சேமிப்பு முகவர் சேவையினை அறிமுகப்படுத்தியுள்ளது

. இச்சேவையின் கீழ் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வருகை தராமலேயே நாளாந்த வைப்புக்களை சேகரித்தல், கடன் தவணைக் கட்டணங்களைக் கட்டுதல், புதிய கணக்குகளை ஆரம்பித்தல் போன்ற அனைத்து வங்கிச் செயற்பாடுகளையும் மேற்கொள்ளும் இயலுமை ஏற்பட்டுள்ளது. தனது 268 கிளைகளைக் கொண்ட வலையமைப்பினூடாக விரிவடைந்து, அனைத்து சேமிப்பு முகவர்கள் மூலமும் வாடிக்கையாளர்களுக்கு உடனடி சேவை வழங்குவதற்கு தேவையான நவீன தொழில்நுட்பசாதனம் (palm top) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர்களால் தமது வாடிக்கையாளர்களுக்கு வினைத்திறன் மிக்க மேலும் நம்பிக்கை உடையதும் சரியானதுமான சேவை வழங்க சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. அதனால் அவர்களுக்கு தமது வைப்பினை வைப்பிலிடுவதற்கும் அதற்கான குறுந்தகவல் (SMS Alert) பெற்றுக்கொள்ளும் வசதியும் வழங்கப்படுகின்றது.  

இச்சேவை மூலம் வர்த்தகர்களுக்கும் நாளாந்த வருமானம் பெறும் வாடிக்கையாளர்களுக்கும் வங்கி வளாகத்துக்கு செல்லாமலே தமது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. அவ்வாறே வங்கி வாடிக்கையாளர்களுக்கு அண்மித்து செல்வதனால் வாடிக்கையாளர்களுக்கு விரயமாகும் காலத்தினையும் பணத்தினையும் சேமிக்க முடிவதுடன், தமது வியாபார நடவடிக்கைகளைப் பாதிக்காத வண்ணம் மேற்கொள்ளும் இயலுமையும் கிடைக்கும்.  

“RDB தொரின் தொர” சேமிப்பு முகவர் சேவையுடன் தொடர்புபட்ட முகவர்களின் நம்பிக்கையினை பெற்றுக்கொள்வதன் ஊடாக வாடிக்கையாளர்கள் அடையும் பயன்கள் எல்லையற்றவை. அதன் கீழ் அவர்களுக்கு அவசர நிதித் தேவைகளுக்கும் சேமிப்பு முகவரின் முன்னறிமுகம் காரணமாக தளர்பிணையில் கடன் வசதியினை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இவ்வர்த்தகர்களுக்கு, நாளாந்த வருமானமீட்டுவோருக்கு அவ்வாறே ஏனைய வாடிக்கையாளர்களுக்கும் தமது அவசர நிதித் தேவையினைப் பூர்த்தி செய்து கொள்ள கிடைக்கும் ஒரு பொன்னான வாய்ப்பாகும். எதிர்காலத்திலும் RDB வங்கியால் தொரின் தொர சேவை மேலும் விஸ்தரிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு வசதியான மற்றும் வினைத்திறன் மிக்க சேவையும் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .