2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது

Freelancer   / 2025 செப்டெம்பர் 21 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் மோகன்லாலுக்கு, 2023 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 23 ஆம் திகதி நடைபெறும் 71 ஆவது தேசிய விருதுகள் விழாவில், இவ்விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.

இந்திய சினிமாவில் ஆகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மோகன்லால். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார். இவர் 400 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப்படத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக 2001 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2019  ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், சினிமாவுக்கு அவர் அற்றிய பங்களிப்பை சிறப்பிக்கும் விதமாக, இந்திய சினிமாவில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருதை அவருக்கு அறிவித்துள்ளது மத்திய அரசு.

செப்டம்பர் 23 ஆம் திகதி நடைபெறும் 71 ஆவது தேசிய விருதுகள் விழாவில், இவ்விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X