S.Sekar / 2022 ஜூன் 17 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கி, Rhoda Life பிரைவட் லிமிடெட் உடன் பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் பங்காண்மையினூடாக, உள்நாட்டு புத்தாக்கமான பிரயாணத் தீர்வாக அமைந்துள்ள Rhoda நிறுவனத்துக்கு பல வங்கிச் சேவை வசதிகளையும், வலையமைப்பு வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையின் முதலாவது மின் ஸ்மார்ட் சைக்கிள் வடிவமைப்பாளரும், உற்பத்தியாளருமாக Rhoda திகழ்கின்றது.

வளர்ச்சிக்குரிய சகல வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுப்பதற்கு செலான் வங்கி தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. நிதிச் சேவை வழங்குநர் எனும் பாரம்பரிய நிலைக்கு அப்பால் சென்று, தனது வாடிக்கையாளர்களுக்கு வசதிகள் மற்றும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் தற்போது கவனம் செலுத்துவதுடன், இளைஞர்கள் மற்றும்பெண் தொழில் முயற்சியாளர்கள் மீது விசேடமாக கவனம் செலுத்துகின்றது. தொழில்முயற்சியாண்மை மற்றும் சிறிய நடுத்தரளவு வியாபாரங்கள் போன்றவற்றின் விருத்திக்கு முக்கியத்துவமளிக்கப்பட வேண்டும் என்பதில் செலான் வங்கி உறுதியாக உள்ளதுடன், இவற்றை ஊக்குவிப்பதனூடாக தேசிய பொருளாதாரத்துக்கு பெருமளவு பங்களிப்பை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.
இந்தப் பங்காண்மை தொடர்பில் செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைகள் பிரிவின் உதவி பொது முகாமையாளர் காமிக டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகள் மற்றும் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவித்து வலுவூட்டுவது எமது பிரதான நோக்கமாக அமைந்துள்ளது. தனியார் வங்கிப் பிரிவில் மூன்றாவது மாபெரும் பங்களிப்பாளராக செலான் அமைந்திருந்ததுடன், கொவிட் தொற்றுப் பரவல் காணப்பட்ட காலப்பகுதியில் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு ஆதரவளித்ததுடன், இந்தத் துறைகளில் எமது திட்டங்களை தொடர்ந்திருந்தோம். Rhoda உடன் கைகோர்ப்பது என்பது எமக்கு முக்கியமான மைல்கல்லாக அமைந்திருப்பதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கான செலான் வங்கியின் உறுதிமொழியை பூர்த்தி செய்து, இந்தப் பயணத்தில் நீங்கள் தனித்திருப்பதில்லை என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது. உங்களின் வங்கி எனும் வகையில், உங்களுடன் செலான் வங்கி இணைந்திருக்கும் என்பதுடன், உங்களின் முழு ஆற்றலையும் வெளிப்படுத்த உதவியாக அமைந்திருக்கும். சவால்களுக்குட்படுத்தும் மனநிலையை நாம் வரவேற்பதுடன், உங்கள் வியாபார முயற்சிக்கு பொருத்தமான கட்டமைப்புக்கு ஆதரவளிப்போம்.” என்றார்.
Rhoda உடன் உத்தியோகபூர்வ வங்கிப் பங்காளர் எனும் இந்தப் பங்காண்மையினூடாக, நிதிச் சேவைகள் வழங்கப்படுவது மாத்திரமன்றி, வங்கியின் வலையமைப்பு மற்றும் பங்காளர்களினூடாக பல இதர வாய்ப்புகளையும் ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும். வியாபாரத்தின் மிருதுவான செயற்பாடுகளை உறுதி செய்யும் வங்கிச் சேவைகளை Rhoda பெற்றுக் கொள்ளும் என்பதுடன், Point of Sales (POS) இயந்திரங்கள், ஒன்லைன் கொடுப்பனவுகளுக்கான இணையக் கொடுப்பனவு கேட்வேகள் மற்றும் திரட்டல் கணக்குகள் போன்றன அடங்கியிருக்கும். 0% வட்டியில்லாத தவணை முறை மீளச் செலுத்தும் திட்டங்கள் மற்றும் பிரத்தியேகக் கடன் வசதிகள் போன்றவற்றை Rhoda விற்பனைக்காக வழங்கும். மேலும், வங்கியின் வலையமைப்பு Rhoda க்கு புதிய வியாபார வாய்ப்புகளை ஒன்லைன் மற்றும் ஓஃவ்லைன் பகுதிகளில் எதிர்பார்ப்பதற்கு உதவியாக அமைந்திருக்கும்.
11 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago