2025 ஜூலை 24, வியாழக்கிழமை

Riu ஸ்ரீ லங்கா ஹோட்டலில் வெவ்வேறு சுவை உணவுகள்

Editorial   / 2017 ஒக்டோபர் 18 , மு.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

24 மணி நேர ஐந்து நட்சத்திர சகல அம்சங்களையும் கொண்ட Riu ஸ்ரீ லங்கா ஹோட்டல், வெவ்வேறு நாடுகளில் பல்வேறு உணவு வகைகளை தயாரித்து வழங்குகிறது. இதில் உள்நாட்டு சமையல் வகைகள் மிகவும் புகழ்பெற்றுத்திகழ்கின்றன. ஹோட்டலில் இரு பிரதான உணவகங்கள் காணப்படுகின்றன. ரிட்டி பன்ன மற்றும் சிலோன் ஆகியன அவையாகும். மேலும் மூன்று தொனிப்பொருள்களுடனான உணவகங்களும் காணப்படுகின்றன. பிரதான உணவகத்தினூடாக, பெருமளவு தெரிவுகளுடனான புஃவே பரிமாறப்படுவதுடன், இதில் இலங்கை மற்றும் ஆசியா முதல் இத்தாலி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் உணவுகளும் பரிமாறப்படுகின்றன. ஹோட்டலின் ஆசிய உணவகமான காவோரி அல்லது இத்தாலிய உணவகமான ஃபோர்செட்டா ஆகிய ஏதேனும் ஒரு பகுதியில் விருந்தினர்கள் தமது இரவு உணவை அருந்தலாம்.

சகல நாடுகளையும் சேர்ந்த விருந்தினர்கள், குறிப்பாக உள்நாட்டவர்கள் பரந்த உணவுகளை ரசித்து உண்கின்றனர். மூன்று உணவு வேளைகளின் போதும், ஆகக்குறைந்தது எட்டு உள்நாட்டு உணவு வகைகளை Riu ஸ்ரீ லங்கா பரிமாறும். இதில் வாழைப்பூ வதக்கல், மரவள்ளி பால் கறி, மஞ்சள் மீன் குழம்பு, பொறித்த மிளகாயுடன் கணவாய் மற்றும் கங்குங், மஞ்சள் சோறு, அவித்த சிவப்பு சோறு, தேங்காய் சம்பல், பொரித்த நெய்ததெலி சம்பல், வல்லாரை சம்பல் உடன் தேங்காய்பூ, பன்றி பால் கறி, இறால் பொறியல், கோழி கறி, தேங்காய் ரொட்டி போன்றன அதிகளவு விரும்பப்படுகின்றன.

Riu ஸ்ரீ லங்காவின் உணவு மீதான ஈடுபாடு மற்றும் நாட்டம் ஆகியன அதன் உணவு வகைகளில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் காணப்படும் சிறந்த சமையலறைகளில் ஒன்றாக இரு அமைந்துள்ளதுடன், அதன் பேக்கரி தயாரிப்புகளுக்கு விருந்தினர்கள் அதிகளவு விருப்பம் காண்பிக்கின்றனர். தொடர்ச்சியாக சிறந்த சுவையை கொண்ட தயாரிப்புகளை வழங்குவதுடன், சிற்றுண்டிகளிலும் இது வெளிப்படுத்தப்படுகிறது.

நிறைவேற்று சமையல் நிபுணரான ஆரித பெர்னான்டோ துறையில் காணப்படும் புகழ்பெற்ற சமையல் நிபுணர்களில் ஒருவராக திகழ்கிறார். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இவர் பெருமளவு அனுபவத்தை பெற்றுள்ளார். சர்வதேச தரங்களுக்கமைய, உணவு தயாரிப்பதில் இவர் மாபெரும் அனுபவத்தைக் கொண்டுள்ளார். வாடிக்கையாளர்களின் சிக்கலான உணவு தேவைகள் மற்றும் சக ஊழியர்களை ஊக்குவித்தல் பயிற்சிகளை வழங்கல் போன்றவற்றையும் வழங்கி வருகிறார்.

சமையல் நிபுணர் பெர்னான்டோ தெரிவிக்கையில், “Riu ஸ்ரீ லங்கா உடன் கடந்து வந்த பயணம் விறுவிறுப்பானதாகவும், மகிழ்ச்சியூட்டுவதாகவும் அமைந்துள்ளது. எமது ரகசியமான சேர்மானங்களான அன்பு மற்றும் ஈடுபாடு ஆகியவற்றை கொண்டு இனிய, நாவூறும் சுவைகளிலமைந்த உணவு வேளைகளை தயாரித்து வழங்குகிறோம். ஊழியர்களுக்கு வலுவூட்டப்பட்டுள்ளதுடன், எமது வழிகாட்டலின் கீழ் புதிய உணவு வகைகளை தயாரிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. எமது அனைத்து விருந்தினர்களும் இனிய நினைவுகளுடன் செல்கின்றனர்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .