Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூலை 18 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரோயல் ஃபுட் மார்க்கட்டிங் கம்பனி, இலங்கையின் முதலாவது ஒன்லைன் கஜு விற்பனை நிலையத்தை ஆரம்பித்துள்ளது. இந்த ‘Royal Cashews Online Cashew Store’ நிலையம் நுகேகொட பகுதியில் அமைந்துள்ளது. ரோயல் ஃபுட் மார்க்கட்டிங் கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி ருவன்வதுகல, இந்த நிலையத்தை வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.
இந்த ஒன்லைன் தளத்தினூடாக வாடிக்கையாளர்கள் தற்போது கஜு ஓடர்களை மேற்கொள்ள முடியும். இதற்காக Royal Cashews App I Google Play அல்லது App Store இனூடாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரு கிலோ கிராமுக்கு அதிகமான கஜுவை ஒன்லைனில் ஓடர் செய்ய முடியும். கொடுப்பனவுகளை ஒன்லைனில் VISA, MASTER அல்லது AMEX கடன் அட்டைகளினூடாக மேற்கொள்ளலாம். அல்லது பொருட்களை விநியோகிக்கும் போது மேற்கொள்ளவும் முடியும்.
நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் பொருட்களை இலவசமாக ரோயல் ஃபுட் மார்க்கட்டிங் கம்பனி விநியோகிக்கும்.
ஒன்லைன் நிலையம் அறிமுகத்துடன், ஐந்து வகையான கஜு தயாரிப்புகளான ‘Dehydrated Full Nut’, ‘Dehydrated Cashew splits’, ‘Dehydrated cashew pieces’, ‘Hot and Spicy cashews’’ மற்றும் ‘alted Cashews’ ஆகியவற்றைத் தற்போது ஒன்லைனில் கொள்வனவு செய்து கொள்ளலாம். உத்தரவாதத்துடனான குறைந்த விலையில் இவற்றை கொள்வனவு செய்யமுடியும்.
ரோயல் ஃபுட் மார்க்கட்டிங் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி ருவன் வதுகல கருத்துத் தெரிவிக்கையில் “கஜு தயாரிப்புகளை சர்வதேச நியமங்களுக்கமைய உற்பத்தி செய்யும் நிறுவனமாக ரோயல் ஃபுட் மார்க்கட்டிங் திகழ்கிறது. வாடிக்கையாளர்கள் தமது வேலைப்பளு நிறைந்த சூழலில், தமக்கு அவசியமான பொருட்களை ஒன்லைனில் ஓடர்செய்து கொள்வதில் அக்கறை காண்பிக்கின்றனர். உயர்தரம் மற்றும் நாவூறும் சுவை போன்றன ஒன்லைனில் விற்பனை செய்யப்படும் கஜு தயாரிப்புகள் கொண்டிருக்க வேண்டும். எமது தயாரிப்புகளின் மீது, வாடிக்கையாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். நாடு முழுவதிலும் பரந்து காணப்படும் எமது வாடிக்கையாளர்களைச் சென்றடையும் நோக்கில், நாம் ஒன்லைனில் எமது விற்பனைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கத் தீர்மானித்தோம். 1999 இல் எமது நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது. குறுகிய காலப் பகுதியில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தனக்கென தனிநாமத்தை பதிவு செய்துள்ளோம். எமது தயாரிப்புகளின் மீது வாடிக்கையாளர்கள் காண்பித்த நம்பிக்கை இதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. Royal Cashews நாமம் புகழ்பெற்ற ஏற்றுமதித் தயாரிப்பாக அமைந்துள்ளது. கஜு தயாரிப்புகளை விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு இனிய அனுபவத்தை வழங்குகிறது. இலங்கையின் நுகர்வோருக்கு சுவை நிறைந்த வெளிநாட்டு உணவுகளை வழங்க முன்வந்துள்ளோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
8 hours ago