2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

SLANSHEI அறிமுக தேசிய கல்வி மாநாடு

Freelancer   / 2023 டிசெம்பர் 08 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர் கல்வியின் எதிர்காலத்தை சீரமைப்பதில் முக்கிய படியாக, அரச சாராத உயர் கல்வி நிலையங்களின் இலங்கை சம்மேளனம் (SLANSHEI), தேசிய உயர் கல்வி மாநாட்டை முன்னெடுத்திருந்தது. இலங்கையின் உயர் கல்விக்கு TNE (Transnational Education) இனால் மேற்கொள்ளப்பட்டிருந்த குறிப்பிடத்தக்களவு பங்களிப்பு தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் இந்த மாநாடு, கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் 2023 நவம்பர் 28ஆம் திகதி நடைபெற்றது.

2016 ஆம் ஆண்டு இலங்கையின் சில முன்னணி தனியார் உயர் கல்வி நிலையங்களினால், நாட்டின் அரச சாராத உயர் கல்வித் துறைக்கு தலைமைத்துவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் SLANSHEI நிறுவப்பட்டது. அரச சாராத உயர் கல்வித்துறையின் விரிவாக்கம், தரம் மற்றும் நியமங்களை மேம்படுத்தல், வெளிநாட்டு மாணவர்களை கவர்ந்திழுத்தல், ஆய்வுக் கோவை மற்றும் ஆய்வு வெளிப்படுத்தலை மேம்படுத்தல் மற்றும் சர்வதேசமயமாக்கலை ஊக்குவித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துவதாக மூலோபாயத் திட்டம் கவனம் செலுத்தியிருந்தது.

தேசிய உயர் கல்வி மாநாடு, வைபவ ரீதியில் பாரம்பரிய விளக்கேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக கல்வி அமைச்சர் – கலாநிதி. சுசில் பிரேம்ஜயந்த் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்ட்ரியு பெட்ரிக் ஆகியோர் பங்கேற்றதுடன், பிரிட்டிஷ் கவுன்சில் பணிப்பாளர் ஒர்லான்டோ எட்வர்ட்ஸ், Skills & Education Group பிரதம நிறைவேற்று அதிகாரி போல் ஈலஸ், கீலி பல்கலைக்கழகத்தின் கலாநிதி. அனிடா ஹேய்ஸ், இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மற்றும் SLANSHEI தலைவர் கலாநிதி. தயான் ராஜபக்ச ஆகியோரும், பிரதான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்களிப்பாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

SLANSHEI தலைவர் கலாநிதி. தயான் ராஜபக்ச வரவேற்புரையை ஆற்றியிருந்ததுடன், அதன் போது, நாட்டில் உயர் கல்வி வழங்கலின் தரத்தையும் பன்முகத்தன்மையையும் மேம்படுத்துவதில் TNEகள் ஆற்றும் முக்கியமான பங்களிப்பை பற்றி விளக்கமளித்திருந்தார். புவியியல் எல்லைகளை மாற்றியமைப்பதற்கு அவசியமான பங்காண்மைகளை கட்டியெழுப்புவதில் SLANSHEI கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் கலாநிதி. ராஜபக்ச குறிப்பிட்டார்.

கலாநிதி. ராஜபக்சவின் உரையைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் கவுன்சில் பணிப்பாளர் ஒர்லான்டோ எட்வர்ட்ஸ் உரையாற்றுகையில், இலங்கையின் உயர் கல்விக் கட்டமைப்பை தரமானதாகவும் சர்வதேச மட்டத்துக்கும் கொண்டு செல்வதற்கு சர்வதேச ரீதியில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய பங்காண்மைகளுக்கு காணப்படும் வாய்ப்புகள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிகழ்வின் விசேட அம்சமாக, பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்வி அமைச்சர் கலாநிதி. சுசில் பிரேமஜயந்த் ஆற்றியிருந்த விசேட உரை அமைந்திருந்தது. தமது உரையில், கல்விச் சிறப்புக்கு உகந்த சூழலை கட்டியெழுப்புவதில் அரசாங்கத்தினால் காண்பிக்கப்படும் அர்ப்பணிப்பு பற்றி ஒன்றுகூடியிருந்தவர்களுக்கு குறிப்பிட்டார். இலங்கையின் உயர் கல்வித்துறையை சர்வதேச நியமங்களுக்கமைய தரமுயர்த்துவதில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றியும் அமைச்சர் பிரேமஜயந்த் தெளிவுபடுத்தினார்.

முதலாவது கருத்துரையை, ஐக்கிய இராஜ்ஜியத்தின் உயர் கல்வித் துறைக்கு TNE விடயங்கள் பற்றிய ஆலோசனைகளை வழங்கும் Universities UK International (UUKi) இன் தலைமை மதிப்பாய்வு மற்றும் கண்காணிப்பு குழுவின் கலாநிதி. அனிடா ஹேய்ஸ் ஆற்றியிருந்தார். சமூகத்தில் பல்கலைக்கழகத்தின் பங்கில் TNE ஒரு கூறாக அமைந்திருப்பதை இவர் வலியுறுத்தியதுடன், மில்லேனிய அபிவிருத்தி இலக்குகளை எய்துவதற்கு பல்வேறு வழிகளில் பங்களிப்புகளை வழங்குவதாக அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். தேசங்களுக்கிடையிலான உறவுகளில் தரம் மற்றும் பங்குக்கான தேவை பற்றி இவர் குறிப்பிட்டதுடன், TNE பாடவிதானத்தில் இணை-விருத்தி, இணை-விநியோகம் மற்றும் இணை-சான்றளிப்பு போன்றவற்றுக்கு உதாரணத்தையும் வழங்கியிருந்தார்.

இரண்டாவது பிரதான உரையை அரச மற்றும் அரச சாராத உயர் கல்வியில் பெருமளவு பங்களிப்பை வழங்கியுள்ள கல்விமானாகிய கலாநிதி. அதுல பிட்டிகல-ஆரச்சி ஆற்றியிருந்தார். இவர் தற்போது SLIIT international இன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக திகழ்கின்றார். சர்வதேச மற்றும் உள்நாட்டு கல்விக் கட்டமைப்பில் நிரந்தரமான அங்கமாக TNE கல்வி அமைந்துள்ளதாக குறிப்பிட்டதுடன், அரசாங்கத்தினால் பொருத்தமான ஏற்பாடுகள் மற்றும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், உயர் கல்வியில் தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து, தரமான உயர் கல்விக்கு காணப்படும் அதிகரித்துச் செல்லும் கேள்வியை நிவர்த்தி செய்வதற்கு, மூலதன வெளிச்செல்கை மற்றும் புத்திஜீவிகளின் வெளியேற்றம், வெளிநாட்டு மாணவர்களை கவர்ந்திழுத்தல் மற்றும் அந்நியச் செலாவணியை உருவாக்கல் மற்றும் இலங்கையை கல்வி மையமாக கட்டியெழுப்புவது போன்றவற்றில் உதவியாக அமைந்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X