Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 02 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் சிறந்த பயிலல் சூழலையும் ஆய்வுகளை முன்னெடுக்கக்கூடிய வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில், SLIITஇன் பிரதான நிலையங்களில் காணப்படும் நூலகங்களில் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், மாலபே, கொள்ளுப்பிட்டி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் காணப்படும் SLIIT கல்வியகங்களின் நூலகங்களின் தரங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பாடங்களுக்கான புத்தகங்கள், ஆசிரியர்களால் பரிந்துரைக்கப்பட்ட வாசிப்பு ஆவணங்கள், வளங்கள், சஞ்சிகைகள், மேற்கோள் புத்தகங்கள், ஓய்வு நேரத்தில் வாசிக்க வேண்டிய புத்தகங்கள், வியாபார சஞ்சிகைகள், அகராதிகள், தகவல் களஞ்சிய கோப்புகள் மற்றும் விவரத்திரட்டுகளைக் கொண்ட DVDகள் மற்றும் CDகள் போன்றன அடங்கியுள்ளன.
SLIIT தன்னியக்கமான நூலகத்தைக் கொண்டுள்ளதுடன், மாணவர்கள் தமக்கு தேவையாக புத்தகங்களை இதனூடாக பெற்றுக்கொள்ளவும், புதுப்பித்துக்கொள்ளவும், ஒதுக்கிக் கொள்ளவும் முடியும். இந்த மெருகேற்றம் தொடர்பில் SLIIT இன் நூலக பொறுப்பதிகாரி புஷ்பமாலா பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “SLIIT இன் சுய திணைக்களமான “மென்பொருள் பொறியியல் சேவைகள் பிரிவு” என்பது, 2005 முதல் பாவனையில் உள்ளது. தொழிற்றுறை தொழில்நுட்ப கல்வியகம், சிலோன் தேயிலை சபை, இலங்கை பட்டய கணக்காளர் கல்வியகம், தேசிய கல்வி நிறுவனம் மற்றும் புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம், திருக்குடும்ப கன்னியர் மடம், புனித பேதுருக்கல்லூரி மற்றும் றோயல் கல்லூரி ஆகியன இந்தத் தரவு இருப்பை பயன்படுத்துகின்றன” என்றார்.
புதியப் பட்டங்களின் அறிமுகத்துடன், வகுப்புகள் அதிகரித்துள்ளன வெவ்வேறு அங்கத்துவ பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்தக் கட்டமைப்பை எவ்வேளையிலும் மாற்றியமைத்துக்கொள்ள முடியும். மாணவர்களுக்கு “Online Public Access Catalogue” ஐ பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், இது நூலகத்தின் இணையக்கட்டமைப்பாகும். இந்தக் கோர்ப்பில் e-புத்தகங்கள், சஞ்சிகைகள், கடந்த கால பரீட்சைத்தாள்கள், கற்கைகளுக்கான பரிந்துரைக்கப்பட்ட சொற்கள் போன்றவற்றுடன் பெருமளவு உள்ளடக்கங்கள் காணப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .