Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 25 , பி.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தகவல் தொழில்நுட்பம், வணிக மற்றும் பொறியியல் துறைகளில் பட்டப்படிப்புகளை வழங்கும் முன்னணி கல்வியகமான SLIIT, 2016/2017 பருவ காலப்பகுதிக்கான மாணவர் சேர்ப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
‘அறிவை பகிர்ந்து, பரப்பி, புத்தாக்கத்தை ஊக்குவித்து உலகத்தரம் வாய்ந்த நிபுணர்களை உருவாக்குவது தொடர்பில் நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். எமது கல்வி மற்றும் பட்டதாரிகளின் தரம் தொடர்பில் நாம் அதிகளவு கவனம் செலுத்துகிறோம். எமது இளமானிக்கற்கைள் மாணவர்களுக்கு வௌ;வேறு கல்விசார் வழிகாட்டல்களை வழங்குகின்றன.
பட்டப்படிப்புகளைப் பயிலும் மாணவர்கள் இரு வருடங்களின் பின்னர், உயர் தேசிய டிப்ளோமாவை பெறுகின்றனர். இது துறைசார் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. நாம் வழங்கும் சகல பாடநெறிகளும் துறைசார்ந்தவை, மாணவர்களுக்கு துறை தொடர்பான ஆழமான உள்ளம்சங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளன’ என SLIIT இன் தலைவரான பேராசிரியர் லலித் கமகே தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்பத்தின் இளமானி பட்டம் (IET இனால் சான்றளிக்கப்பட்டது) எனும் நான்கு ஆண்டு கற்கை மூலமாக தகவல் தொழில்நுட்பம், தகவல் கட்டமைப்பு பொறியியல், மென்பொருள் பொறியியல், ஈடுபாட்டுனான ஊடக, கணினி கட்டமைப்புகள் மற்றும் வலையமைப்பு பொறியியல் ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்பத்தில் இளமானிப்பட்ட கற்கை மூன்று ஆண்டுகள் முன்னெடுக்கப்படுவதுடன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய பல்லூடக கற்கைகளையும் தன்வசம் கொண்டுள்ளது. நான்கு ஆண்டுகள் இளமானி வணிக முகாமைத்துவ கற்கை என்பது, மனித மூலதன முகாமைத்துவம், கணக்கியல் மற்றும் நிதியியல், சந்தைப்படுத்தல் முகாமைத்துவம், சரக்கியல் மற்றும் விநியோகத்தொடர் முகாமைத்துவம் மற்றும் வியாபார ஆய்வுகள் போன்றவற்றை கொண்டுள்ளது.
பொறியியல் துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு நான்கு ஆண்டுகளில் பயிலக்கூடிய பொறியியல் இளமானிப்பட்டத்தை பின்வரும் பிரிவுகளில் தொடர முடியும். Civil, Mechanical, Mechatronics, Material, Electrical and Electronic Engineering.
SLIITஇனால் வழங்கப்படும் கற்கைகளுக்கு இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச பல்கலைக்கழகங்கள் சம்மேளனம் மற்றும் பொதுநலவாய பல்கலைக்கழகங்களின் சம்மேளனம் ஆகியவற்றின் அங்கத்துவத்தையும் SLIIT கொண்டுள்ளது.
31 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
3 hours ago