2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

SLT-MOBITEL mCash மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் கைகோர்ப்பு

Freelancer   / 2024 பெப்ரவரி 23 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL இன் mCash, யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியுடன் கொண்டுள்ள நீண்ட கால பங்காண்மையை மேலும் வலிமைப்படுத்தியுள்ளது. SLT-MOBITEL mCash வாடிக்கையாளர்களுக்கு பரந்தளவு ஆயுள் காப்புறுதி தீர்வுகள் தெரிவை அறிமுகம் செய்து இந்த பங்காண்மை மேம்படுத்தலை மேற்கொண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் இரு நிறுவனங்களுக்குமிடையே ஏற்படுத்தப்பட்ட நீண்ட கால உறவின் நீடிப்பாக இந்த கைகோர்ப்பு அமைந்துள்ளதுடன், SLT-MOBITEL இன் பரந்த வலையமைப்பினூடாக ஆயுள் காப்புறுதி சந்தாப் பணத்தொகையை திரட்டும் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு இந்த கைகோர்ப்பு பெரிதும் உதவியாக அமைந்திருந்தது.

மொபைல் இணைப்பு மற்றும் ஆயுள் காப்புறுதி ஆகிய பிரிவுகளில் இந்த நம்பிக்கையை வென்ற வர்த்தக நாமங்கள் கொண்டுள்ள உறுதித் தன்மையை மேலும் வெளிப்படுத்தும் வகையில், அண்மையில் இரு நிறுவனங்களும் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டிருந்தன. அதன் பிரகாரம் SLT-MOBITEL வாடிக்கையாளர்களுக்கு தற்போது முன்னணி ஆயுள் காப்புறுதி தெரிவுகளை இலகுவாக அணுகும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சகாயத்தன்மை வாய்ந்தனவாக அமைந்திருப்பது மாத்திரமன்றி, சிக்கல்களற்ற பதிவு செயன்முறையுடன், mCash இன் துரித கொடுப்பனவு உட்கட்டமைப்பின் வலுவூட்டலையும் கொண்டுள்ளது.

மொபிடெல் பிரைவட் லிமிடெட் பிரதம செயற்பாட்டு அதிகாரி சுதர்ஷன கீகனகே கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் காப்புறுதித் துறையில் புத்தாக்கமான டிஜிட்டல் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்காக யூனியன் அஷ்யூரன்ஸ் உடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொள்வதற்கும் உதவும் வகையில் இந்த டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க தீர்வுகளை வடிவமைக்க ஏதுவாக அமைந்திருக்கும். இலங்கை சமூகத்தார் மத்தியில் நிதி உள்ளடக்கம் மற்றும் நேர்த்தியான தாக்கம் போன்றவற்றை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றமையானது, பரந்தளவு பாவனையாளர்களுக்கு ஆயுள் காப்புறுதியை இலகுவாக அணுகுவதற்கும் பயனளிக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கச் செய்வதற்கும் உதவியாக இருக்கும்.” என்றார்.

இந்த மூலோபாய கைகோர்ப்பினூடாக, SLT-MOBITEL mCash வாடிக்கையாளர்களுக்கு யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் சிறந்த ஆலோசகர்களிடமிருந்து விசேடத்துவமான வழிகாட்டல் கிடைப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரின் பிரத்தியேகமான தேவைகளுக்கமைய ஆயுள் காப்புறுதி தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு நிபுணத்துவ ஆலோசகர்கள் தம்மை அர்ப்பணித்துள்ளனர். இரு நிறுவனங்களினதும் அர்ப்பணிப்பினூடாக, வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற பெறுமதி மற்றும் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வாடிக்கையாளரை மையப்படுத்திய வழிமுறை பின்பற்றப்படுகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .