Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
S.Sekar / 2021 மே 24 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய தொலைத்தொடர்பாடல்கள் மற்றும் மொபைல் சேவைகள் வழங்குநரான SLT-MOBITEL, சந்தையில் புதிய Unlimited AnyTime internet அறிமுகம் செய்துள்ளது. முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு நிலையான மற்றும் மொபைல் வாடிக்கையாளர்களுக்காக இந்த சேவைகளை வழங்கியுள்ளது.
வாடிக்கையாளர்கள் தாம் பணியாற்றும் முறை, அவர்கள் முன்னெடுக்கும் வாழ்க்கை முறை என்பவற்றுக்கமைய அவர்களின் டேட்டா தேவை அதிகரிக்கவுள்ளது என்பதை SLT-MOBITEL புரிந்து கொண்டுள்ளது. Unlimited AnyTime internet பக்கேஜ்களினூடாக டிஜிட்டல் செயற்பாட்டாளர்கள், வியாபார நிபுணர்கள், தொழில்முயற்சியாளர்கள் மற்றும் விற்பனைதை் துறையைச் சேர்ந்தவர்கள் என பரந்தளவு வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு சேவைகளை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
சகல முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கும் தமது தேவைகளின் பிரகாரம் தற்போது பரந்தளவு ப்ளான்களை தெரிவு செய்து கொள்ள முடியும். மொபைல் மற்றும் புரோட்பான்ட் பாவனையாளர்களுக்கும் unlimited internet பக்கேஜ்களை செல்லுபடியாகும் காலம், bandwidth போன்றவற்றின் பிரகாரம் பெற்றுக் கொள்ளும் வசதி காணப்படுகின்றது. இதனூடாக அவர்களுக்கு சகாயமான, வரையறையற்ற டேட்டாவை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
SLT 4G LTE, ADSL Home Broadband மற்றும் Fiber பக்கேஜ்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மாறிக் கொள்வதற்காக அவர்களுக்கு பொருத்தமான bandwidth தெரிவுகளை மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகையைப் பயன்படுத்தி புதிய இணைப்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
கேமிங், ஸ்ட்ரீமிங்கிற்கான டேட்டா, அப்லோட் செய்வது, டவுன்லோட் செய்வது, Vlogging, blogging அல்லது virtual reality என அனைத்துக்கும் SLT-MOBITEL இன் Unlimited AnyTime Data பக்கேஜ்களுடன் வாடிக்கையாளர்களுக்கு தமது சாதனங்களை டேட்டா தீர்ந்துவிடும் எனும் அச்சத்துடன் பயன்படுத்த வேண்டியதில்லை. வாடிக்கையாளர்களுக்கு உயர் தரம் வாய்ந்த அனுபவம், பெறுமதி மற்றும் நெகிழ்ச்சித் தன்மை ஆகியவற்றை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த பக்கேஜ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், நாட்டை டிஜிட்டல் யுகத்துக்கு நகர்த்துவதாக அமைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
1 hours ago
14 May 2025
14 May 2025