2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

SLT-MOBITEL இடமிருந்து ‘The Directory’ 2023/24 அறிமுகம்

Freelancer   / 2024 மார்ச் 11 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களின் (MSMBs) சகல சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர தீர்வுகளுக்கான ஒரே நிலையமான SLT Digital Services (Pvt) Limited (SLT-DIGITAL), இனால் மேம்படுத்திய ‘The Directory’ 2023/24 (The Rainbow Pages), தேசிய வியாபார தொலைபேசி விவரக்கோவை வெளியிடப்பட்டுள்ளது.

‘The Directory’ 2023/24 என்பது தேசிய வியாபார தொலைபேசி விவரக் கோவையின் பிந்திய வெளியீடாக அமைந்திருப்பதுடன், நாட்டில் வியாபார செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான புதிய சாதனமாகவும் அமைந்துள்ளது. பாவனையாளருக்கு நட்பான வழிகாட்டலினூடாக, பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி சேர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

‘The Directory’ இல் இலங்கையின் 10,000க்கும் அதிகமான தினசரி ஒன்லைன் தேடல்கள் பதிவாவதுடன், இலங்கையின் ஒரே தேசிய வியாபார தொலைபேசி விவரக்கோவை எனும் தனது நிலையையும் கொண்டுள்ளது. 6000க்கும் அதிகமான வியாபார நிறுவனசார் பதிவுகள், 170000 சிறு விளம்பர பதிவுகள் மற்றும் உறுதி செய்யப்பட்ட பதிவுகள் மற்றும் அரச நிறுவனங்கள் சேவைகள் பிரிவுகள் மற்றும் சமய வழிபாட்டுத் தலங்கள் போன்றனவும் அடங்கியுள்ளன.

மேம்படுத்தப்பட்ட தேசிய வியாபார தொலைபேசி விவரக் கோவை 2023/24 இல், ஹார்ட்வெயார், நிர்மாணம், மின்சாதனங்கள், இலத்திரனியல் போன்ற பல்வேறு பிரிவுகளுக்கான தேடல்களை நிவர்த்தி செய்யும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் அடங்கியுள்ளன.  இந்த விவரக் கோவையில் பதிவிடுவதனூடாக, வியாபாரங்களுக்கு குறிப்பாக Business to Business (B2B) மற்றும் MSMBs களுக்கு Search Engine Optimization (SEO) அணுகும் வசதி வழங்கப்படுகின்றது. சர்வதேச இணையத் தேடல் என்ஜின்களுக்கு உகந்த வகையில் இந்த விவரக் கோவை வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் கூகுள் தேடல்களில் தென்படக்கூடிய வகையில் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், உயர்தர பதிவிடல் மற்றும் விளம்பர பகுதி போன்றன அதிகளவு வாடிக்கையாளர்களை கையகப்படுத்துவதற்கு வலுவூட்டும் வகையில் அமைந்துள்ளது.

பதிவிடப்பட்ட மற்றும் உள்ளடக்கப்பட்டுள்ள வியாபாரங்களுக்கு காணப்படும் மற்றுமொரு வாய்ப்பாக, அரசாங்கத்தின் டென்டர்களுக்கு சேவை வழங்குநர்களாக திகழ்வதற்குரிய தகைமையைாக அமைந்திருப்பதாகும். விற்பனையாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், அனுமதியளிக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் தொடர்பான அரச திறைசேரி சுற்றறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

SLT Digital Services (Pvt) Ltd இன் பிரதம நிறைவேற்று அதிகாரி உபுல் மஞ்சநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “2022 ஆம் ஆண்டில் இறுதியான வியாபார தொலைபேசி விவரக் கோவை அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிறுவனம் தனது பிரதான கவனத்தை டிஜிட்டல் மற்றும் ஒன்லைன் அப்ளிகேஷன்களில் காண்பிப்பதற்கு நகர்த்தியிருந்தது. சுமார் 80% ஆன அச்சு விளம்பரதாரர்கள் தொடர்ந்தும் 2023/24 “The Directory” இல் மற்றும் அதன் ஒன்லைன் பதிப்பிலும் தமது விளம்பரங்களை பதிவு செய்ய முன்வந்திருந்தனர். எமது பங்காளர்களுக்கு தொடர்ச்சியாக பெறுமதியை ஏற்படுத்தி வருவது என்பது எமது பிரதான மூலோபாயங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. அதனை கவனத்தில் கொண்டு, எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு தமது வர்த்தக நாம தகவல்களை பரவலாக்கம் செய்வதற்காக, நாம் தற்போது பரந்தளவு டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தீர்வுகள், இணையத் தீர்வுகள், பொருளடக்க விருத்தி போன்றவற்றை வழங்குகின்றோம். எதிர்காலத்தில் மேலும் பல புதிய தீர்வுகள் மற்றும் சேவைகளையும் நாம் அறிமுகம் செய்வோம்.” என்றார்.

டிஜிட்டல் சந்தைப்படுத்தல், வியாபார தொலைபேசி விவரக் கோவை விளம்பரம், டிஜிட்டல் தொலைபேசி விவரக் கோவை தீர்வுகள், இணைய வடிவமைப்பு தீர்வுகள், நிகழ்வு முகாமைத்துவம், செயற்படுத்தல் மற்றும் வர்த்தக நாம சேவைகள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் தீர்வுகள் போன்றவற்றில் SLT-DIGITAL நிபுணத்துவம் பெற்றுள்ளது. அதனூடாக நாட்டின் நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்களின் தெரிவுக்குரிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் தீர்வுகள் வழங்குநராக திகழ்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .