Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2022 ஓகஸ்ட் 19 , மு.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL, இலங்கையின் முதலாவது மெய்நிகர் நகரான 'Traverse' ஐ 'Wyawasaya-2022' வர்த்தக மற்றும் கல்விக் கண்காட்சியில் அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.
எதிர்காலத்துக்கான நகரம் என அறிவிக்கப்பட்டுள்ள Traverse, நேரடி மற்றும் டிஜிட்டல் அனுபவங்களை இணையத்தில் ஒன்றிணைத்து சர்வதேச மற்றும் வரையறைகளற்ற கைகோர்ப்புக்கான வாய்ப்புகளை வழங்கும் வகையில் அமைந்திருக்கும்.
வளர்ச்சிக்கான சிறப்பை வாய்ப்பை வழங்குவதாக 'Traverse' அமைந்திருக்கும் என்பதுடன், வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் தமது பொருத்தப்பாட்டை மேம்படுத்திக் கொள்வதற்கு இலங்கை வியாபாரங்களுக்கு சிறந்த புத்தாக்கத்தை வழங்குவதாகவும் அமைந்திருக்கும்.
Virtual Reality, Virtual Marketplaces, Digital Assets மற்றும் Non-Fungible Tokens அல்லது NFTகளினால் பிரத்தியேகமான வாடிக்கையாளர் அனுபவங்களைப் பெற்றுக் கொடுக்கப்படுவதுடன், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல ஏதுவாக அமைந்துள்ளன.
சொப்பிங் தொகுதிகள், வங்கிகள், மெய்நிகர் கண்காட்சி நிலையம், திரையரங்கு, கேமிங் வலயம், அரசாங்க e-counterகள், கலைப் பகுதிகள் போன்றன 'Traverse' இல் அடங்கியிருக்கும். வியாபார உரிமையாளர்களுக்கு தமது தேவைகளின் பிரகாரம் மெய்நிகர் சந்தைப்பகுதிகளிலிருந்து தமக்கு அவசியமான பகுதிகளை கொள்வனவு அல்லது வாடகைக்கு பெற முடியும்.
உள்நாட்டு வியாபார சமூகத்துக்கு சிறந்த பெறுமதியை சேர்க்கும் வகையில், மெய்நிகர் நகரினால், தந்திரோபாய பங்காண்மைகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும், இலாபகரத்தன்மையை இதுவரை இனங்காணப்படாத வருமானமீட்டும் வழிமுறைகளினூடாக பெற்றுக் கொள்வதற்கும் உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும், விலைச் சிக்கனமான, அளவிடக்கூடிய மற்றும் நுட்ப முறைகளைக் கொண்டு குறைந்த முதலீட்டு மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுகளுடன் சர்வதேச பார்வையாளர்களை உள்நாட்டு வியாபாரங்களுக்கு சென்றடையக்கூடியதாக இருக்கும். இலங்கையின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு மெய்நிகர் நகரினூடாக சர்வதேச சந்தைப்பகுதிக்கான அணுகல் உருவாக்கப்படுவது மேலதிக அனுகூலமாக அமைந்துள்ளது.
டிஜிட்டல் மாற்றியமைப்பு சேவை வழங்குநராக அறியப்படும் SLT-MOBITEL, நாட்டின் முதல் மெய்நிகர் நகர அனுபவம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் அனுகூலங்களில், நீண்ட காலம் நிலைத்திருக்கும் வெளிப்படுத்தல் பரந்தளவு சந்தைப்பகுதிக்கு காணப்படுவதுடன், வெபிநார்கள் மற்றும் நேரலை chatகள், சகல கட்டமைப்புகளையும் இலகுவாக அணுகுவது, செயலிலுள்ள பகுப்பாய்வுகளினூடாக சலுகை வழங்கல்களை ஊக்குவிக்கும் நெகிழ்ச்சித்தன்மை போன்றன அடங்கியுள்ளன.
மெய்நிகர் நகர் அறிமுகம் செய்யப்பட்டு அதில் SLT-MOBITEL இன் பங்களிப்பு புத்தாக்க மற்றும் டிஜிட்டல் சேவை வழங்குநர் எனும் வகையில், புரட்சிகரமான தொழில்நுட்பங்களைக் கொண்டு நாட்டின் முதல் மெய்நிகர் சந்தைப்பகுதியை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான வழிகாட்டல்களை வழங்குகின்றது.
22 minute ago
27 minute ago
31 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
27 minute ago
31 minute ago
45 minute ago