Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2022 ஜூலை 04 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL இன் முழு உரிமையாண்மையில் இயங்கும் SLT Digital Services (Pvt) Limited (SLT-DIGITAL) இனால் தேசிய வியாபார தொலைபேசி விவரக் கோவை, ‘The Directory’ 2022 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய வியாபார தொலைபேசி விவரக் கோவையின் பிந்திய வெளியீடாக ‘The Directory’ 2022 அமைந்திருப்பதுடன், நாட்டில் வியாபாரத்தை மேற்கொள்வதற்கான புதிய சாதனமாகவும் அமைந்துள்ளது. பாவனையாளர்களுக்கு நட்பான வழிகாட்டல்களினூடாக மேம்படுத்தப்பட்ட உள்ளம்சங்கள் மெருகேற்றப்பட்ட வர்த்தக நாமத்தில் வழங்கப்படுவதுடன், ஏற்கனவே காணப்படும் மற்றும் எதிர்காலத்தில் இணையவுள்ள வாடிக்கையாளர்களுக்கு மற்றும் பதிவு செய்து கொண்டுள்ள விற்பனையாளர்களுக்கு மேலதிக பெறுமதியை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இலங்கையின் ஒரே தேசிய வியாபார தொலைபேசி விவரக்கோவை எனும் வகையில், ‘The Directory’ இல் 10000க்கும் அதிகமான தினசரி ஒன்லைன் தேடல்கள், 6000 க்கும் அதிகமான வியாபார நிறுவனசார் நிரல்படுத்தல்கள், 170000 க்கும் அதிகமான சிறுவிளம்பரங்கள் மற்றும் வகைப்படுத்தப்படாத உறுதி செய்யப்பட்ட இணைப்புகள் மற்றும் சேவை வகைகள் போன்றன அரச நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் அடங்கலாக, சகல பொருளாதார பிரிவுகளையும் உள்வாங்கி அமைந்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட தேசிய வியாபார தொலைபேசிக் கோவை 2022 இல் உறுதி செய்யப்பட்ட தொடர்பாடல் தகவல்கள் காணப்படுவதுடன், நாட்டு மக்களுக்கு தமக்கு அவசியமான தேடல்களை இலகுவாக மேற்கொள்ளக்கூடிய வகையிலும், தொழிற்துறை பிரிவுகளான ஹாட்வெயார், நிர்மாணம், மின்சாதனங்கள், இலத்திரனியல் போன்ற பிரிவுகளைச் சேர்ந்த தேடல் அம்சங்களையும் கொண்டுள்ளது. Business Directory 2022இல் பதிவு செய்யப்பட்டிருப்பதனூடாக, Business to Business (B2B) மற்றும் MSMBs விற்பனையாளர்களுக்கு Search Engine Optimization (SEO) அணுகல் வசதியை ஏற்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். சர்வதேச இணையத் தேடல் கட்டமைப்புகளில் தென்படக்கூடிய வகையில் இந்த தொலைபேசி விவரக்கோவை வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், கூகுள் தேடல்களில் நிறுவனங்கள் தென்படுவது அதிகமாக்கும் வகையில் அமைந்துள்ளன. மேலும், உயர்ந்த வகைப்படுத்தல் மற்றும் விளம்பர பகுதியினூடாக, வியாபாரங்களுக்கு அதிகளவு வாடிக்கையாளர்களை உள்வாங்குவதற்கான வலுவூட்டல் வழங்கப்படுகின்றது.
பதிவு செய்யப்பட்ட மற்றும் நிரல்படுத்தப்பட்ட வியாபாரங்களுக்கான மற்றுமொரு வலுச்சேர்க்கப்பட்ட உள்ளம்சமாக, அரசாங்க விலை மனுக் கோரல்களுக்கு விநியோகத்தர்களாக திகழ்வதற்கான தகைமை கிடைப்பது. அரசாங்க திறைசேரி சுற்றறிக்கைகளினூடாக பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களுக்கு முன்னேற்றகரமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
டிஜிட்டல் சந்தைப்படுத்தல், வியாபார தொலைபேசி கோவை விளம்பரம், டிஜிட்டல் தொலைபேசி கோவைத் தீர்வுகள், இணைய வடிவமைப்பு தீர்வுகள், நிகழ்வு முகாமைத்துவம், செயற்படுத்தல் மற்றும் வர்த்தக நாம சேவைகள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் தீர்வுகள் போன்றவற்றில் SLT-DIGITAL நிபுணத்துவம் பெற்றுள்ளது. இதனூடாக, நாட்டின் நுண், சிறு மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கு மிகவும் தெரிவுக்குரிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மற்றும் சந்தைப்படுத்தல் தீர்வுகள் வழங்குநராகா திகழ்வதற்கு பங்காற்றுகின்றது.
21 minute ago
33 minute ago
42 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
33 minute ago
42 minute ago
58 minute ago