2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

SLT-MOBITEL இனால் டிஜிட்டல் புகைப்படக் கட்டமைப்பான ‘picsforest.com’அறிமுகம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 01 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் புகைப்படக் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி, பாவனையாளர்களுக்கு பிரத்தியேகமான, சிறந்த உள்நாட்டு பொருளடக்கங்களை வழங்கும் வகையில், நாட்டின் முதலாவது டிஜிட்டல் புகைப்படக் கட்டமைப்பான ‘www.picsforest.com’ ஐ SLT-MOBITEL அறிமுகம் செய்துள்ளது. நாட்டின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை வலிமைப்படுத்தும் செயற்பாடுகளில் மற்றுமொரு டிஜிட்டல் படிமுறையாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

வெளிநாடுகளைச் சேர்ந்த பல புகைப்படக் களஞ்சிய இருப்புகள் விற்பனை மற்றும் கொள்வனவு இணையத்தளங்கள் காணப்பட்ட போதிலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவை உள்நாட்டுக்கு உகந்த வகையில் அமைந்திருப்பதில்லை. எவ்வாறாயினும், பல உள்நாட்டு அல்லது சர்வதேச புகைப்படக் கலைஞர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்தி, தமது புகைப்படங்களுக்கு வருமானம் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. மேலும், உள்நாட்டு புகைப்படங்களை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் பாவனையாளர்கள், சர்வதேச இணையத்தளங்களில் தங்கியிருக்க வேண்டியுள்ளதுடன், அவை செலவு அதிகமானதாகவும் அமைந்துள்ளன.

இந்த முக்கிய தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், SLT-MOBITEL இனால் வலுவூட்டப்பட்ட புதிய டிஜிட்டல் கட்டமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கையின் புகைப்படங்களை கொள்வனவு மற்றும் விற்பனை செய்யக்கூடிய புகைப்படக் களஞ்சிய e-வணிக தளமாக அமைந்துள்ளது. எவ்வாறாயினும், உள்நாட்டு புகைப்படக்கலைஞர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், picsforest.com இனால் வெளிநாட்டவர்களுக்கும் வாய்ப்புகளை வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச நியமங்களுக்கமைய இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பலரால் இலகுவாக அணுகப்படக்கூடிய வகையில் பாவனையாளர்களுக்கு நட்பான வகையில் அமைந்துள்ளது.

விற்பனையாளர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்தி தம் புகைப்படங்களை காட்சிப்படுத்த முடியும் என்பதுடன், கொள்வனவாளர்களுக்கு தென்னிந்திய பிராந்திய அம்சங்களைக் கொண்ட படங்களை கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும். புகைப்படக்கலைஞர்களின் இலவச மற்றும் கட்டணம் செலுத்தும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இணையத்தளத்தினூடாக தமது பிரத்தியேகமான பணிகளை வெளிப்படுத்தி பிரச்சாரப்படுத்த முடியும். அதனூடாக பெருமளவு பார்வையாளர்களை சென்றடைந்து, தமது வாடிக்கையாளர் இருப்பை விரிவாக்கம் செய்து கொள்ள முடியும். சிறந்த உள்நாட்டு மற்றும் தென்னிந்திய பிராந்திய புகைப்படங்களை கொள்வனவு செய்ய எதிர்பார்ப்போருக்கு உகந்ததாக இந்த கட்டமைப்பு அமைந்திருக்கும்.

Referral sellers களுக்கும் பரிந்துரைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதால், தனிநபர்கள் அல்லது வியாபாரங்களுக்கு இவ்வாறு பரிந்துரைகளை வழங்குவதனூடாகவும் வருமானமீட்டக்கூடியதாக இருக்கும்.

மேலும், தமது பல்வேறு தேவைகளுக்காக சிறந்த மற்றும் பரந்தளவு காட்சித் தெரிவுகளை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இந்தக் கட்டமைப்பு மிகவும் பொருத்தமானதாக அமைந்திருக்கும் என்பதுடன், photographers, illustrators, designers, presenters, photo collectors என அனைத்து தரப்பினருக்கும் தமது ரசிகர்களுடன் தொடர்புகளை பேண உதவியாக அமைந்திருக்கும்.

27 பிரிவுகளிலிருந்து புகைப்படங்களைத் தெரிவு செய்து கொள்ள முடியும். இவற்றில், விலங்குகள், களியாட்டம், உணவு மற்றும் பானங்கள், இயற்கை, மக்கள், கட்டடக்கலை போன்றன அடங்குகின்றன.

பட்டியலிடப்பட்டிருக்கும் புகைப்படங்கள் பல்வேறு formatகளில் காணப்படும். எதிர்காலத்தில் 3D புகைப்படங்கள் மற்றும் vector illustrations தெரிவுகளையும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே காணப்படும் சர்வதேச புகைப்படக் களஞ்சிய இணையத்தளங்களுக்கு மாறாக, trending photos, most downloaded photo, most reputed photographer மற்றும் gossip pack போன்ற உள்ளம்சங்களினூடாக இது மேம்படுத்தப்படும்.

மேலும், சர்வதேச இணையத்தளக் கட்டமைப்புகளிலிருந்து, அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்தி படங்களை கொள்வனவு செய்திருந்தோருக்கு, தற்போது இலங்கை ரூபாயில், உள்நாட்டு இணையத்தளத்திலிருந்து படங்களை கொள்வனவு செய்யும் அல்லது விற்பனை செய்யும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாணய பரிமாற்றத்துக்கான தேவையை இந்த உள்ளம்சம் இல்லாமல் செய்துள்ளதுடன், கொடுக்கல் வாங்கல் செயன்முறையை எளிமைப்படுத்தியுள்ளது. அதனூடாக, இலங்கை சந்தையினுள் இலகுவாக, பாவனையாளர்களுக்கு நட்பான வகையில் அணுகக்கூடியதாக இருக்கும்.

உள்நாட்டு நாணயத்தைப் பயன்படுத்தி ரூ. 1000 எனும் குறைந்த கட்டணத்திலிருந்து புகைப்படங்களை கொள்வனவு செய்ய முடியும். இலகுவாக பதிவு செய்து கொள்ளக்கூடிய வகையில் தன்னியக்கமான chat box மற்றும் மின்னஞ்சல் வசதிகளையும் இந்த இணையத்தளம் வழங்குகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X