Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
S.Sekar / 2022 பெப்ரவரி 11 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு எதிராக சுகாதாரப் பராமரிப்புத் துறை செயலாற்றுவதற்கு உதவிகளை வழங்கும் தொடர்ச்சியான முயற்சிகளின் அங்கமாக, SLT-MOBITEL, மூன்று Multi Para Monitors களை பலபிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு அண்மையில் அன்பளிப்புச் செய்திருந்தது.
பலபிட்டிய ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர். கே. சமரத்னவிடம் இந்த சாதனத்தை SLT-MOBITEL அதிகாரிகள் கையளித்திருந்தனர்.
நோயாளிகளின் பராமரிப்புக்கு நோயாளர் கண்காணிப்பு கட்டமைப்புகள் அத்தியாவசியமானவையாக அமைந்துள்ளன என்பதை SLT-MOBITEL புரிந்து கொண்டுள்ளது. நன்கொடையாக வழங்கப்பட்ட monitors களின் பெறுமதி 1.5 மில்லியன் ரூபாயாகும். இவை நவீன உள்ளம்சங்களைக் கொண்டுள்ளதுடன், நோயாளர்களின் பராமரிப்பை மதிப்பீடு செய்வதை கண்காணிக்கும் வகையிலும், இதயம், மூச்சுத் துடிப்பு போன்ற செயற்பாடுகளை அளவிடக்கூடியதாகவும், நோயாளர் பராமரிப்பை மேம்படுத்துவதற்கு உதவுவதாகவும் அமைந்துள்ளதுடன், உயிர்களை பாதுகாப்பதிலும் பங்களிப்புச் செய்கின்றது.
தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் வழங்குநர் எனும் வகையில், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் SLT-MOBITEL தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளது. முன்பு இந்நிறுவனத்தினால் ஐந்து PCR இயந்திரங்கள் நாடு முழுவதையும் சேர்ந்த முன்னணி பொது வைத்தியசாலைகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025