2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

SLT-MOBITEL வருடாந்த நிதி அறிக்கைக்கு TAGS விருதுகள் 2023 தங்க விருது

Freelancer   / 2024 பெப்ரவரி 05 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா ரெலிகொம் (SLT) வருடாந்த நிதி அறிக்கை 2022க்கு, அண்மையில் நடைபெற்ற TAGS (வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூரல், ஆளுகை மற்றும் நிலைபேறாண்மை) விருதுகள் 2023 நிகழ்வில் தொலைத்தொடர்பாடல்கள் மற்றும் தொழில்நுட்பத் துறையில் தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

SLT பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க இந்த விருதைப் பெற்றுக் கொண்டதுடன், பிரதம நிதி அதிகாரி சஞ்ஜீவ சமரநாயக்க, சந்தைப்படுத்தல் சேவைகள் பொது முகாமையாளர் அனுருத்த சூரியாரச்சி மற்றும் SLT-MOBITEL இன் இதர சில சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தினால் (CA ஸ்ரீ லங்கா) எற்பாடு செய்யப்பட்டிருந்த TAGS விருதுகள் அல்லது வருடாந்த நிதி அறிக்கை விருதுகள் என்பது, 56 வருட காலமாக தொடரப்படுகின்றது.  பல்தேசிய நிறுவனங்கள் முதல் பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் சிறிய நடுத்தரளவு வியாபார நிறுவனங்கள் வரை நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் போட்டிகரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக இந்தவிருதுகள் வழங்கும் நிகழ்வு TAGS விருதுகள் என CA ஸ்ரீ லங்காவினால் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதனூடாக நிதிசார் மற்றும் நிதிசார் அறிக்கையிடல் முறையை ஊக்குவிப்பதற்கு எதிர்பார்த்துள்ளது.

ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ஒன்றிணைக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த நிதி அறிக்கை ‘The Future at our Core’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டிருந்ததுடன், வெளிப்படைத்தன்மை, சிறப்பு மற்றும் பங்காளர்களுடன் சிறந்த தொடர்பாடல் ஆகியவற்றுக்காக நிறுவனம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. பெருமளவு வெளிப்படுத்தல்கள், கட்டமைக்கப்பட்ட விளக்கங்கள், நியமங்களை பின்பற்றல் மற்றும் பிரதான பங்காளர்களை இலக்கு வைத்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தொடர்பாடல்கள் போன்றன, தொழிற்துறையில் SLT-MOBITEL இனால் கூட்டாண்மை அறிக்கையிடல், நம்பிக்கையை ஊக்குவித்தல் மற்றும் முதலீட்டாளர்கள், பங்காளர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் தொழிற்துறைசார் நியமத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.  TAGS 2023இல் SLT-MOBITEL வெற்றியீட்டியுள்ளமையானது, தொலைத்தொடர்பாடல் பிரிவில் மற்றும் தொழிற்பாட்டு மற்றும் நிதிசார் அவதானம் ஆகியவற்றில் தொடர்ச்சியான தலைமைத்துவத்துக்கான ஆதரவாக அமைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X