Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மே 15 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL, நாடு முழுவதையும் சேர்ந்த வைத்தியசாலைகளுக்கு ரூ. 8 மில்லியனுக்கு அதிகமான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை நன்கொடையாக வழங்கி, வெசாக் பண்டிகையை கொண்டாடியது. “சம்பந்தியாவே தஹமி சத்காரய” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், வெசாக் பண்டிகையின் இரக்கம் மற்றும் பிறருக்கு உதவுதல் போன்ற பெறுமதிகளை உறுதி செய்தும், நிறுவனத்தின் சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) அர்ப்பணிப்புகளுக்கமைவாகவும் இந்தத் திட்டத்தை முன்னெடுத்திருந்தது.
SLT-MOBITEL இன் துணை நிறுவனமாக, eChannelling இனால், இந்தத் திட்டத்துக்கு ஆதரவளிக்கப்படுவதுடன், அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் விநியோகம் மேற்கொள்ளப்படுவதுடன், நன்கொடை வழங்கும் திட்டத்தின் போது, சகல சம்பந்தப்பட்ட சேவைகளை வழங்கும்.
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இந்த நன்கொடை வழங்கும் திட்டம் இடம்பெற்றதுடன், இதில் SLT குழுமத்தின் தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ, SLT சந்தைப்படுத்தல் சேவைகள் பொது முகாமையாளர் அனுருத்த சூரியாரச்சி, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர். அனோஜா ரொட்ரிகோ, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர். ஸ்ரீயாணி ரணசிங்க, இதர சில SLT-MOBITEL ஊழியர்கள் மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலையின் ஊழியர்கள் சிலரும் பங்கேற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை, பதுளை மாகாண பொது வைத்தியசாலை, அனுராதபுரம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, கராபிட்டிய போதனா வைத்தியசாலை மற்றும் குருநாகல் போதனா வைத்தியசாலை ஆகியவற்றுக்கு SLT-MOBITEL இடமிருந்து அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
“சம்பந்தியாவே தஹமி சத்காரய” திட்டம் தொடர்பில் SLT குழுமத்தின் தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “சமூகத்தில் நிலவும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் எமது இந்த ஆண்டுக்கான வெசாக் நிகழ்ச்சித் திட்டம் அமைந்துள்ளது. நாட்டில் சத்திரசிகிச்சை, ஆயுள் காப்பு மற்றும் நுண்ணுயிர் கொல்லி போன்றவற்றுக்கான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவும் நிலையில், இலங்கையின் சமூகப் பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில் SLT-MOBITEL முன்வந்து, தேசத்துக்கு உதவிகளை வழங்க எதிர்பார்க்கின்றது. எந்தவொரு சமூகத்திலும் மற்றும் பொருளாதாரத்திலும் சுகாதாரம் என்பது முக்கிய அங்கமாக அமைந்திருப்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம். பௌத்த கொள்கையின் பிரகாரம் வழங்குவது என்பதற்மைய, எமது குடிமக்களின் நலனில் பங்களிப்பு வழங்க எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர். அனோஜா ரொட்ரிகோ கருத்துத் தெரிவிக்கையில், “சகல குடிமக்களுக்கும் வழங்கும் சுகாதார பராமரிப்பு வசதிகளின் உள்ளக அங்கமாக மருந்துகள் அமைந்துள்ளன. அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் இன்றி, எம்மால் உயிர்களை பாதுகாக்க முடியாது, சுகாதாரத்தை ஊக்குவிக்க முடியாது. அல்லது தொற்றுப் பரவல்களைக் கட்டுப்படுத்தவும் முடியாது. SLT-MOBITEL இனால் வழங்கப்பட்ட இந்த நன்கொடைக்காக நாம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம். இதனூடாக, சமூகத்தை மேம்படுத்தவும், உயிர்களை காப்பதில் பங்களிப்பு வழங்கும் முடியும்.” என்றார்.
அரச வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசிய மருந்துப் பொருட்களைப் பெற்றுக் கொள்வது மற்றும் தற்போது நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டிலிருந்து விடுபடுவது போன்றவற்றை இலக்காகக் கொண்ட, நிறுவனத்தின் ESG செயற்பாடுகளில் அங்கமாக இந்த நிகழ்ச்சித் திட்டம் அமைந்துள்ளது. எட்டு மாகாணங்களினுள் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. மேலும், சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவிடமிருந்து கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் இந்த மருந்துப் பொருட்கள் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது.
44 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
53 minute ago
1 hours ago