2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

‘SLT Zero One விருதுகள்’ விழா

Editorial   / 2017 ஜூலை 11 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீ லங்கா ​ டெலிகொம் நிறுவனத்தின் SLT Zero One விருது வழங்கும் விழா, கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வு SLT யின் சமூக இணையத்தள வலையமைப்புக்களிலும், PEO TV அலைவரிசைகளிலும் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டன. 

தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ உட்பட, ஸ்ரீ லங்கா ​ெடலிகொம் குழுமத்தின் தலைவர் பீ.ஜீ.குமாரசிங்க சிறிசேன, SLT நிறுவனத்தின் பொது பிரதம நிறைவேற்று அதிகாரி திலீப விஜேசுந்தர மற்றும் நிறுவனத்தின் ஏனைய சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளும், இத்துறையின் பிரசித்திபெற்ற தொழில் நிபுணர்களும் இங்கு சமூகமளித்திருந்தனர். 

இந்த நிகழ்வின் போது, உரையாற்றிய அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ, டிஜிட்டல் சாதனைகளைப் பாராட்டும் வகையில், SLT Zero One விருதுகள் நிகழ்வை ஸ்ரீ லங்கா ​ெடலிகொம் நிறுவனம் நாட்டில் முதல் முறையாக ஏற்பாடு செய்தமைக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார். அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில், மக்கள் தமது அன்றாட வாழ்க்கை முறையில் டிஜிட்டல் செயற்பாடுகளை உள்வாங்கிக் கொள்வதிலும், தகவல் தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தை ஆவலுடன் இணைத்துக் கொள்வதிலும் உள்ள நாட்டம் பற்றிக் கருத்து வெளியிட்டார். 

துறைசார் விருதுகள், தனிநபர் சம்பந்தப்பட்ட விருதுகள் என்ற வகையில், இரண்டு பிரதான துறைகளின் அடிப்படையில் இங்கு விருதுகள் வழங்கப்பட்டன. கனிணிக் கல்வி மற்றும் தகவல் தொலைத்தொடர்புத் தொழிற்றுறைக்கு ஆற்றிய பங்களிப்பு, இத்துறையின் வளர்ச்சிக்கும் இலங்கையில் இணையதள சேவைகளின் விருத்திக்கும் ஆற்றிய அளப்பெரும் ஈடுபாடு என்பனவற்றைக் கருத்திற்கொண்டு, பேராசிரியர் அபய இந்துருவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இலங்கையின் திறமைக்கு வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், புதிய இலக்குகளை உருவாக்கிக் கொடுத்த தொழில் முயற்சியாளரான
திரு.கிருஷான் கனகேரத்ன அவர்களுக்கு இலங்கையின் திறமையை உலகளாவிய நிலைக்கு கொண்டு சென்றமைக்கான விருது வழங்கப்பட்டது. இலங்கையில் தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப சட்ட ஒழுங்குகளின் அமைப்பு மற்றும் இணையதள ஆளுமை செயற்பாடுகளின் உருவாக்கத்துக்கு சட்டங்களையும் கொள்கைகளையும் வகுப்பதில் பாரிய பங்காற்றிய ஜயந்த பெர்னாண்டோவும் இந்த நிகழ்ச்சியின் போது, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .