2025 ஜூலை 26, சனிக்கிழமை

SLT இன் நிர்வகிக்கப்பட்ட பாதுகாப்பு சேவை ஆரம்பம்

Gavitha   / 2017 மார்ச் 02 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளாவிய அளவில் இணையப் பாதுகாப்புத் தீர்வுகளை வழங்கும் Fortinet மற்றும் வணிகங்கள், செல்லின சந்தைப் பிரிவுகளுக்கான DDoS பாதுகாப்பில் முன்னணியிலுள்ள NETSCOUTஇன் பாதுகாப்பு பிரிவான Arbor Networks உடன் இணைந்து, ஸ்ரீ லங்கா டெலிகொம், வணிக நிறுவனங்களுக்குத் தனது அடுத்த தலைமுறை பாதுகாப்புச் சேவைகளை நிர்வகிக்கவிருக்கிறது. டெலிகொம் இன் நிர்வகிக்கப்பட்ட பாதுகாப்பு சேவைகள், இலங்கையிலுள்ள பெரிய, நடுத்தர மற்றும் சிறிய வணிக நிறுவனங்களுக்கு பல்செயற்பாட்டுத் தீர்வுகளை வழங்கும்.  

“தகவல் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக்கள் முன்னெப்போதுமில்லாத வகையில், குறிப்பாக வணிகங்கள் மத்தியில் அதிகரித்து வருவதால் ஒரு பல்செயற்பாட்டு வலையமைப்பு பாதுகாப்பு கட்டமைப்பின் தேவை மிகவும் அவசியமாகும்” என்கிறார், ஸ்ரீலரெ இன் வணிகதீர்வுகள் பிரிவின் பொது முகாமையாளரான எம் ஐ டீன். மேலும் அவர், “தேசிய தகவல் தொடர்பு தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான டெலிகொம், செலவுப்பயனுறுதியுள்ளதும் பாதுகாப்பானதுமான ஆரம்பம் முதல் இறுதிவரையான இணைய இணைப்பை வாடிக்கையாளருக்கு வழங்குவதில் கவனத்தைச் செலுத்துகிறது. நிர்வகிக்கப்பட்ட firewall சேவையும் DDOS பாதுகாப்புச் சேவையும் பழைய புதிய ஸ்ரீலரெ வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். மேலும், மின்னஞ்சல் பாதுகாப்பானது கணிணிமுகில் சேவையை அடிப்படையாகக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர் இச்சேவையைப் பதிவு செய்ததும், தொடர்ந்து தனது firewall ஐ நிர்வகித்துக்கொள்ளமுடியும்.  

டெலிகொம் இன் நிர்வகிக்கப்பட்ட பாதுகாப்புச் சேவையில் அடங்கியுள்ள மூன்று உற்பத்திப்பொருட்களாவன: Managed Firewall: வணிகங்களின் வலையமைப்புக்களுக்கான பாதுகாப்பை வழங்கும், Email Security, வணிகங்களின் வலையமைப்புக்களுக்கான Gateway மின்னஞ்சல் பாதுகாப்பை வழங்கும், DDoS Protection Service, வணிகங்களின் வலையமைப்புக்களை Distributed Denial of Services (DDoS) தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும். வாடிக்கையாளரின் இடத்தில் இருக்கும் இணைய லிங்க் மூலமாக, பாதுகாப்பாக அணுகப்படும் portal மூலமாக, இந்த ஒவ்வொரு உற்பத்திப்பொருட்களையும் கண்காணிக்கலாம்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X