2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

SLT குழுமத்தின் 2023 இன் இரண்டாம் காலாண்டு நிதிப் பெறுபேறுகள்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 25 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடப்பு ஆண்டின் இரண்டாம் காலாண்டில் SLT PLC இனால் 2.4% (ரூ. 400 மில்.) வருமான வளர்ச்சி பதிவாகியிருந்த நிலையில், மொபிடெல் 9.3% (ரூ. 1,066 மில்.) சரிவை பதிவு செய்திருந்தது. எனவே, குழுமத்தின் வருமானம் 2.8% (ரூ. 763 மில்.) இனால் வீழ்ச்சியடைந்திருந்தது. SLT PLC வருமான அதிகரிப்பில் புரோட்பான்ட், IPTV மற்றும் நிறுவனசார் வருமான மூலங்கள் பங்களிப்பு செய்திருந்தன. எவ்வாறாயினும், சர்வதேச இடம்மாற்று வருமானம் 90.3% (ரூ. 614 மில்.) குறைவடைந்தமை காரணமாக இந்த அதிகரிப்பும் குறைந்திருந்தது. சர்வதேச இடம்மாற்று வருமானம் என்பது எவ்விதமான எல்லைப் பெறுமதிகளையும் கொண்டிருக்காது என்பதை குறிப்பிட வேண்டும். SLT PLC வருமான வளர்ச்சி பிரதானமாக, ஃபைபர் வலையமைப்பு மற்றும் வாடிக்கையாளர் வெளியேற்றம் போன்றவற்றினால் தாமதமடைந்தது. மொபிடெல் வருமான வீழ்ச்சியில், வாடிக்கையாளர் இருப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி பங்களிப்புச் செய்திருந்தது. ஜுன 2022 முதல் 2023 ஜுன் வரையான காலப்பகுதியில் வாடிக்கையாளர் இருப்பு 1 மில்லியனினால் வீழ்ச்சியடைந்திருந்தது.

SLT குழுமத்தின் தொழிற்பாட்டு செலவுகள், முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 2023 இரண்டாம் காலாண்டு காலப்பகுதியில் 15.1% இனால் (ரூ. 2,513 மில்.) அதிகரித்திருந்தது. மொபிடெல் வருமானம் ஒப்பீட்டளவில் வீழ்ச்சியடைந்தாலும், தொழிற்பாட்டு செலவுகள் 30.4% இனால் (ரூ. 1,998 மில்.) அதிகரித்திருந்தது. விற்பனைகளுடன் தொடர்புடைய தரகுகளினால் இரண்டாம் காலாண்டில் அதிகளவு பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தன. SLT PLC தொழிற்பாட்டு செலவுகள் 5.5% இனால் (ரூ. 619 மில்.) அதிகரித்திருந்தது. இலங்கை ரூபாயின் மதிப்பிறக்கம், மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிப்பினால் ஏற்பட்ட AMC/license செலவுகள் இதில் பங்களிப்பு செய்திருந்தன.

குழுமத்தின் EBITDA பெறுமதி 31.9% இனால் (ரூ. 3,276 மில்லியன்) வீழ்ச்சியடைந்திருந்தது. மொபிடெல் EBITDA பெறுமதி 61.9% இனால் (ரூ. 3,064 மில்லியன்) வீழ்ச்சியடைந்திருந்தமை முக்கிய பங்காற்றியிருந்தது. அதன் பிரகாரம், குழுமத்தின் தொழிற்பாட்டு வருமானம், வரிக்கு முந்திய மற்றும் பிந்திய இலாபம் முறையே 92.7% (ரூ. 3,121 மில்.), 161.3% (ரூ. 6,039 மில்.) மற்றும் 208.0% (ரூ. 4,076 மில்.) ஆகிய பெறுமதிகளால் வீழ்ச்சியடைந்திருந்தன. குறைந்த வருமானம் மற்றும் உயர் தொழிற்பாட்டு செலவுகள் போன்றவற்றினால் மொபிடெல் ரூ. 835 மில்லியன் தொழிற்பாட்டு இழப்பாக பதிவு செய்திருந்தது. காலாண்டில் தேறிய இழப்பு ரூ. 1,390 மில்லியனாக பதிவாகியிருந்தது. காலாண்டில் SLT PLC இன் தேறிய இழப்பு ரூ. 1,027 மில்லியனாகும். செலவு அதிகரிப்பு மற்றும் LTE சொத்துகள் நடைமுறைப்படுத்தப்பட்டமை போன்றவற்றினால் இந்த இழப்பு பதிவாகியிருந்தது. தொழிற்பாட்டு செலவுகளில் SLT PLC ஊழியர் செலவுகள் 36.8% ஆக பதிவாகியிருந்தன.

SLT குழுமத்தின் வருமான வளர்ச்சி 2023 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் ரூ. 52.7 மில்லியனாக வீழ்ச்சியடைந்திருந்தது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 0.4% வீழ்ச்சியாகும். நிறுவனமட்டத்தில், SLT வருமானங்கள் 2023ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் ரூ. 34.6 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது 6.4% வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

மொபிடெல் வருமானம், 2022 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் ரூ.1.5 பில்லியன் இழப்பை பதிவு செய்திருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில், ரூ. 2.2 பில்லியனினால் வீழ்ச்சியடைந்திருந்தது. எவ்வாறாயினும், நிர்வாகத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களினூடாக, மொபிடெலினால் அதன் வாடிக்கையாளர்கள் இருப்பு மற்றும் வருமானத்தில் ஏற்பட்ட இழப்பை சீர் செய்து கொள்ள முடிந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X