2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

SLT குழுமம் மூன்றாம் காலாண்டில் மிதமான நிதிசார் வளர்ச்சியை பதிவு

Freelancer   / 2023 நவம்பர் 24 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

2023 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த மூன்றாம் காலாண்டு பகுதிக்கான நிதிப் பெறுபேறுகளை SLT குழுமம் வெளியிட்டுள்ளது. இதில், மிதமான நிதிசார் வளர்ச்சி பதிவாகியுள்ளது. SLT PLC வருமானம் ரூ. 17,490 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது 3.7% வளர்ச்சியடைந்திருந்தது. மொபிடெல் 2022 மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2.7% சரிவை பதிவு செய்திருந்தது.

காலாண்டில் குழுமத்தின் மொத்த வருமானம் 3.9% இனால் அதிகரித்து ரூ. 27.7 பில்லியனாக பதிவாகியிருந்தது. இப்பெறுமதி2022 மூன்றாம் காலாண்டில் ரூ. 26.7 பில்லியனாக காணப்பட்டது. SLT PLC வருமான வளர்ச்சியில் புரோட்பான்ட் (Broadband), PEOTV மற்றும் நிறுவனசார் தீர்வுகள் (Enterprise Business) வருமான மூலங்கள் பங்களிப்பு செய்திருந்தன. மூன்றாம் காலாண்டில், மொபிடெல் தொடர்ச்சியாக சில காலாண்டுகளில் சரிவை பதிவு செய்திருந்ததை தொடர்ந்து, வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் மூன்றாம் காலாண்டில் 3% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.

2022 மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், SLT குழுமத்தின் தொழிற்பாட்டு செலவு (Opex) நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 13.3% இனால் அதிகரித்து ரூ. 19.7 பில்லியனாக பதிவாகியிருந்தது. SLT இன் தொழிற்பாட்டு செலவு அதிகரிப்பில் பிரதானமாக, மின்சார கட்டண அதிகரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பு போன்றன பங்களிப்புச் செய்திருந்தன. வருமானத்தில் வளர்ச்சி பதிவாகியிருந்த போதிலும், அதிகரித்த செலவுகளினால், SLT இன் இலாபத்தில் தாக்கம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. 

2023 செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில், SLT குழுமத்தின் தொழிற்பாட்டு செலவு (Opex) ரூ. 57 பில்லியனாகும். கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி 49.6 பில்லியனாக காணப்பட்டதுடன், 14.9% அதிகரிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. மின்சார கட்டணங்கள் அதிகரிப்பு, அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் மதிப்பு இறக்கம் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் போன்ற காரணிகளால் செலவுகள் அதிகரித்திருந்தன.

2023 மூன்றாம் காலாண்டில் SLT குழுமத்தின் நிதிப் பெறுபேறுகளில் அதன் துணை நிறுவனமான மொபிடெலின் இலாபகரத் தன்மையில் ஏற்பட்ட வீழ்ச்சி பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. குழுமத்தின் EBITDA பெறுமதி முன்னைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 13.7% வீழ்ச்சியடைந்திருந்தது. இதில் பிரதானமாக மொபிடெல் EBITDA பெறுமதி பங்களிப்புச் செய்திருந்தது. வருமான வீழ்ச்சி மற்றும் தொழிற்பாட்டு செலவு (Opex) அதிகரிப்பு ஆகியன மொபிடெல் EBITDA பெறுமதி வீழ்ச்சிக்கு வழிகோலியிருந்தன. அதன் பிரகாரம், குழுமத்தின் தொழிற்படு இலாபம் காலாண்டில் 81% இனால் வீழ்ச்சியடைந்திருந்தது. குழுமத்தின் வரிக்கு பிந்திய இலாபம் 208%இனால் அதிகரித்திருந்தது. இதில் மொபிடெல் பதிவு செய்திருந்த தொழிற்பாட்டு நட்டம் மற்றும் SLT PLC இன் வட்டி செலவு அதிகரிப்பு போன்றன பங்களிப்பு செய்திருந்தன.

எவ்வாறாயினும், 2023 இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் மூன்றாம் காலாண்டில் மொபிடெல் இலாபகரத்தன்மை குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியடைந்திருந்ததுடன், EBITDA பெறுமதி 36%, EBIT பெறுமதி 93% மற்றும் NPAT பெறுமதி 44% இனாலும் அதிகரித்திருந்தன. வருமானம் மற்றும் வியாபார செம்மையாக்கங்களினால் இந்த வளர்ச்சி பதிவாகியிருந்தது. மொபிடெல் கடுமையான செலவுக் கட்டுப்பாடுகள் மற்றும் வருமான அதிகரிப்பு செயற்பாடுகளுடன், குறைந்த நிதிச் செலவுகளுடன், குழுமத்தின் இலாபத்தை மேம்படுத்தி மீளநிறுவுவதற்கு பங்களிப்பு வழங்கியிருந்தன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X