2024 மே 03, வெள்ளிக்கிழமை

SLT டிஜிட்டல் சேர்விஸ் இனால் ’’Automobile.LK’’ அறிமுகம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 02 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT டிஜிட்டல் சேர்விசஸ் (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தினால், ஒன்லைன் டிஜிட்டல் விவரக் கோவையான Automobile.LK அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுடன் தொடர்புடைய சகல அம்சங்களுக்கும் பரிபூரண உள்ளம்சங்களை வழங்குவதாக இந்த டிஜிட்டல் கட்டமைப்பு அமைந்துள்ளது.

வாகனங்கள் தொடர்பான சகல தேவைகளையும் நிவர்த்தி செய்து கொள்ளக்கூடிய உள்ளடக்கமான வாகன இணையத்தள கட்டமைப்பாக Automobile.LK திகழ்கின்றது. பிந்திய தகவல்களை வழங்குவதற்கு மேலதிகமாக, வாகன சேவைகள் மற்றும் தொழிற்துறை விநியோகத்தர்கள் அடங்கலாக பரிபூரண உள்ளம்சங்களை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதுடன், மையப்படுத்தப்பட்ட பகுதியாகவும் இந்த போர்டல் அமைந்துள்ளது.

ஒன்லைன் விவரக் கோவையான Automobile.LK, வாகன வர்த்தகங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சாதனமாக அமைந்துள்ளது. குறிப்பாக ஒன்லைன் கட்டமைப்பில் தமது பிரசன்னத்தை உறுதி செய்து, விளம்பரப்படுத்திக் கொள்ள உதவியாக அமைந்திருக்கும். வாகன வியாபாரங்களுக்கு தமது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வெளிப்படுத்துவதற்கு அவசியமான Search Engine Optimization (SEO) வசதிகளைக் கொண்டிருப்பதுடன், தேடல் பெறுபேறுகளின் அடிப்படையில் சர்வதேச பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் திறனையும் கொண்டிருக்கும்.

டிஜிட்டல் சேர்விசஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி உபுல் மஞ்சநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் வாகனங்கள் தொழிற்துறையில் புரட்சிகரமான படியாக Automobile.LK அமைந்துள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் சக்தியை கையகப்படுத்தி, வாகனங்கள் தொடர்பான முக்கியமான தகவல்களை அணுகும் வசதியை ஏற்படுத்தும் கட்டமைப்பை நாம் ஏற்படுத்தியுள்ளதுடன், நுகர்வோர் மற்றும் வியாபாரங்களுக்கிடையே அர்த்தமுள்ள தொடர்புகளை ஏற்படுத்தவும் முன்வந்துள்ளோம்.” என்றார்.

SLT டிஜிட்டல் சேர்விசஸ், இலங்கையின் வாகனங்கள் துறையை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தியுள்ளதுடன், Automobile.LK இனால் செல்வாக்குச் செலுத்துவதில் முக்கிய பங்காற்றப்படும். மேம்படுத்தப்பட்ட தொழிற்துறை கைகோர்ப்பு மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாடு ஆகியவற்றின் திறவுகோலாகவும் இந்தப் புத்தாக்கம் அமைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .