2025 ஜூலை 19, சனிக்கிழமை

SLT வளாகம் மற்றும் Cisco உடன் கொமர்ஷல்வங்கி கைகோர்ப்பு

Editorial   / 2018 நவம்பர் 07 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த, தரம் எட்டு முதல் பத்து வரையான மாணவர்கள், 150 மணித்தியாலங்கள் கொண்ட விரிவான ஒரு தகவல் தொழில்நுட்ப கற்கை நெறியைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளனர். கொமர்ஷல் வங்கியின் நிதி உதவியுடன், SLT வளாகம் (தனியார்) வரையறுக்கப்பட்ட நிறுவனம் Cisco நெட்வேர்கிங் ஏஜன்ஸி என்பனவற்றின் ஒத்துழைப்போடு, இந்தத் திட்டம் அமுல் செய்யப்படவுள்ளது.  

வங்கியின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டத்தின் ஒரு அங்கமான இணைய வழி கல்வித் திட்டத்தின் கீழ் இது இடம்பெறவுள்ளது.  

இந்த ‘IT எஷன்சியல்’ கற்கை நெறி, ஆரம்ப கட்டமாக பண்டாரகம வெளிட்டா மைத்திரி மகா வித்தியாலயம், பாணந்துறை அகமதி பாலிகா வித்தியாலயம் என்பனவற்றில் தொடக்கி வைக்கப்பட்டது. கம்பியூட்டர்களின் வன் மற்றும் மென் பொருள் அடிப்படைகள், பாதுகாப்பு, வலையமைப்பு, தகவல் தொழில்நுட்ப (IT) தொழில்சார் நிபுணர் ஒருவரின் பொறுப்பு என்பனவற்றை உள்ளடக்கியதாக இந்தக் கற்கை நெறி அமைந்துள்ளது.  

இந்தப் பாட நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்பவர்களுக்கு பூகோள ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘Cisco IT எஷன்சியல்ஸ்’ சான்றிதழ் வழங்கப்படும்.  

இந்தப் பாடநெறியை நடத்தும் தொழில்சார் நிபுணர்களுக்கான கொடுப்பனவை, கொமர்ஷல் வங்கி பொறுப்பேற்கும். கற்கை நெறிக்கான உள்ளடக்கத்தை Cisco வழங்கும் அவர்களே பரீட்சைகளையும் நடத்தி இலவசமாக சான்றிதழ்களையும் வழங்குவர். IT கற்கை நெறியை SLT வளாகம் வழங்கும்.  

தனியார் கணினிகளை நிர்மாணிக்க, திருத்தி அமைக்க மற்றும் தரமுயர்த்த தேவையான ஆற்றலை இந்தப் பாடநெறி வழங்கும். கணினியை முகாமைத்துவம் செய்தல், பராமரித்தல், விண்டோஸ் செயற்பாட்டு முறை, வலையமைப்பு தொடர்பாடலுக்கு ஏற்றவாறு கணினிகளை ஒருங்கமைத்தல், இணைய மற்றும் கிளவுட் சேவைகளோடு கணினிகளை இணைத்தல், தேவைக்கு ஏற்ப அச்சுப் பொறியை கம்பியூட்டரோடு தொடர்புபடுத்தல், ஏனைய தரவுகள் மற்றும் வலையமைப்பு பாதுகாப்புக்களை வழங்கல், பிரச்சினைகளுக்கும் கடின பொருள் மற்றும் மென்பொருள் சிக்கல்களுக்கும் முன்னேற்றகரமான தீர்வுகளை முன்வைத்தல் என்பனவும் இந்தப் பாடநெறியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.  

இதற்கு மேலதிகமாக இந்தப் பாடநெறி கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது. ஒரு ஆய்வு கூடத்தில் எவ்வாறு பாதுகாப்பாக வேலை செய்வது என்பதையும் போதிக்கும். தனியார் கணினிகளின் தவிர்ப்பு பராமரிப்பையும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலையும் கூட இந்தப் பாடநெறி போதிக்கும். தனியார் கணினிகளை பாவனைக்காக எவ்வாறு ஒன்று திரட்டல் அவற்றில் பல்வேறு விமதமான மென்பொருள்களை எவ்வாறு செயற்பட வைத்தல் என பல விடயங்கள் போதிக்கப்படும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X