Freelancer / 2025 நவம்பர் 03 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை SOS சிறுவர் கிராமங்கள், “Together for Children – Ambassador Signing & Partnership Summit” எனும் நிகழ்வை கொழும்பு Radisson ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில், தொடர்ச்சியாக பத்து வருடங்களாக SOS சிறுவர் கிராமங்களுடன் கைகோர்த்து செயலாற்றும் முன்னாள் சர்வதேச கிரிக்கட் நட்சத்திரமும், நன்மதிப்பைப் பெற்ற ICC போட்டி மத்தியஸ்தருமான ரொஷான் மஹாநாம மற்றும் புதிதாக கைகோர்த்துள்ள விருது வென்ற பாடகியான உமாரியா சின்ஹவன்ஸ ஆகியோர் SOS சிறுவர் கிராமங்களின் உத்தியோகபூர்வ தூதுவர்களாக வரவேற்கப்பட்டனர்.
தொண்டாற்றும் அடிப்படையில் ரொஷான் மற்றும் உமாரியா ஆகியோர் செயலாற்றவுள்ளதுடன், பொது சேவை மற்றும் இளைஞர் வலுவூட்டல் தொடர்பில் பெருமளவு அனுபவத்தைக் கொண்டுள்ளனர். சிறுவர் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் இளைஞர் வலுவூட்டல் தொடர்பில் விழிப்புணர்வை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக அவர்களின் நிலை அமைந்திருக்கும் என்பதுடன், பெற்றோரின் பராமரிப்பை இழந்த சிறுவர்களுக்காக முன்னெடுக்கப்படும் நிதி திரட்டும் செயற்பாடுகளுக்கு ஆதரவை வழங்குவர்.
இலங்கை SOS சிறுவர் கிராமங்களின் தேசிய பணிப்பாளர் திவாகர் ரட்னதுரை கருத்துத் தெரிவிக்கையில், “ஒவ்வொரு பிள்ளையும் அன்பு, பாதுகாப்பு மற்றும் மதிப்புடன் வளர்வதை உறுதி செய்யும் எமது நோக்கை இந்த மைல்கல் உறுதி செய்வதாக அமைந்துள்ளது. ரொஷான் மஹாநாம மற்றும் உமாரியா சிங்ஹவன்ஸ ஆகியோரை எமது தூதுவர்களாக இணைத்துக் கொண்டுள்ளமையினூடாக, அதிகளவு சமூகங்களை சென்றடைந்து, தேவையுடைய சிறுவர்களுக்கு அவசியமான ஆதரவை திரட்டிக் கொள்வதற்கு எமக்கு மேலும் வலிமை சேர்க்கப்பட்டுள்ளது. எமது பங்காளர்களுடன் இணைந்து, இலங்கையைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் திரண்ட பொறுப்பைக் கொண்ட நகர்வொன்றை கட்டியெழுப்புகிறோம்.” என்றார்.
கொண்டாட்டத்தில் மேலும் அம்சங்களை சேர்க்கும் வகையில், சிறுவர்களுக்காக விசேடமாக அர்ப்பணிக்கப்பட்ட புதிய பாடல் ஒன்றை SOS சிறுவர் கிராமங்கள் அறிமுகம் செய்திருந்தது. இந்தப் பாடலை சகோதரிகளாக உமாரியா சிங்ஹவன்ஸ மற்றும் உமாரா சிங்ஹவன்ஸ ஆகியோர் பாடியிருந்தனர். இது SOS சிறுவர் கிராமங்களின் தயாரிப்பாகும். இந்த பாடல் வீடியோ நிகழ்வின் போது காட்சிப்படுத்தப்பட்டதுடன், பார்வையாளர்களுக்கு அன்பு, ஒற்றுமை மற்றும் ஒவ்வொரு பிள்ளைக்குமான எதிர்பார்ப்பு ஆகியவற்றை அனுபவிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் அமைந்திருந்தது.
3 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
9 hours ago