2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

SUN SIYAM RESORTS பாசிக்குடாவின் நிர்வாக செயற்பாடுகளுக்கு நிபுணர்கள் நியமனம்

Freelancer   / 2023 நவம்பர் 17 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைதீவுகளின் விருந்தோம்பல் குழும ஹோட்டல் தொடரான Sun Siyam Resorts, அதன் பாசிக்குடா ஹோட்டலின் பொது முகாமையாளராக அர்ஷத் ரிஃபாய் மற்றும் விற்பனைகள் மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளராக துலங்க டி மெல் ஆகியோரை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. 2023 நவம்பர் 17ஆம் திகதி இந்த ஐந்து நட்சத்திர புட்டிக் ஹோட்டல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மீள ஆரம்பிக்கப்படுவதுடன், இந்த புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையின் கலாசார அம்சங்களுடன் சொகுசான உள்ளம்சங்களைக் கொண்டு, விருந்தினர்களுக்கு சிறந்த அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த ஹோட்டல் மாற்றத்துக்குட்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலின் நிர்வாக செயற்பாடுகளுக்கு அர்ஷத் மற்றும் துலங்க ஆகியோர் பெருமளவு தொழிற்துறை அனுபவத்தை சேர்த்துள்ளனர்.

பொது முகாமையாளர் எனும் வகையில், இலங்கைப் பிரஜையான அர்ஷத், Sun Siyam பாசிக்குடாவின் ஒட்டுமொத்த செயற்பாடுகளுக்கும் மேற்பார்வையாளராக திகழ்வார். இவர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் குழும பொது முகாமையாளர் ஆகியோருடன் இணைந்து செயலாற்றுவார். தகவல் தொழில்நுட்பத்துறையில் தமது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்திருந்த அர்ஷத், செயற்பாடுகள் பிரிவுக்கு படிப்படியாக மாறியிருந்தார். இந்தத் துறையில் கடந்த காலங்களில் பெருமளவு அனுபவத்தைப் பெற்றுக் கொண்டார். இந்த பதவியை பொறுப்பேற்கும் முன்னர், இவர் Sun Aqua பாசிக்குடாவின் செயற்பாட்டு முகாமையாளராக பணியாற்றியிருந்தார். 2020 ஆம் ஆண்டில் இந்த Sun Aqua பாசிக்குடா, Sun Siyam பாசிக்குடா என பெயர்மாற்றம் செய்யப்பட்டிருந்தது. Sun Siyam Resorts இல் சுமார் ஒரு தசாப்த காலத்துக்கு மேலான அர்ப்பணிப்பைக் கொண்டுள்ள அர்ஷத், Sun Siyam பாசிக்குடாவின் ஆரம்ப நிர்மாண செயற்பாடுகள் முதல் தமது தொடர்புகளைக் கொண்டுள்ளதுடன், ஹோட்டலின் ஒவ்வொரு பிரிவின் செயற்பாடுகளையும் மேற்பார்வை செய்துள்ளார்.

அர்ஷத் கருத்துத் தெரிவிக்கையில், “சிந்தனைகள், நோக்கம் மற்றும் ஆக்கத்திறன் போன்றன வெளிப்படுத்தப்படும் விறுவிறுப்பான இந்த நிறுவனத்தில் அங்கம் வகிப்பதையிட்டு நான் மிகவும் பெருமை கொள்கின்றேன். இலங்கையில் சுற்றுலாத் துறை மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், ஹோட்டலின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குவதுடன், உள்நாட்டு பன்முகத்தன்மை நிறைந்த கலாசார அம்சங்களுடனான தங்குமிட அனுபவத்தை எமது விருந்தினர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து, நாட்டின் சுற்றுலாத்துறைக்கும் பங்களிப்பை வழங்கி, பொருளாதாரத்துக்கும் பங்களிப்புச் செய்வது எனது பிரதான பணியாக அமைந்திருக்கும்.” என்றார்.

Sun Siyam பாசிக்குடாவின் சகல சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைகள் சார்ந்த செயற்பாடுகளுக்கும் தலைமைத்துவமளிக்கும் இலங்கைப் பிரஜையான துலங்க, நாட்டின் விருந்தோம்பல் துறையில் 13 வருட கால முன் அனுபவத்தைக் கொண்டுள்ளார். ANI Private Resorts, Onyx Hospitality, UGA Escapes, Resplendent Ceylon, Aman Resorts மற்றும் Cinnamon Grand ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ள துலங்க, அமைவிடம் மற்றும் சேவை நிலைப்படுத்தல் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றுவார்.

துலங்க கருத்துத் தெரிவிக்கையில், “கொவிட்-19 முதல் பொருளாதார நெருக்கடி வரை இலங்கை பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருந்த போதிலும், மீண்டெழுந்திறனை இலங்கை எப்போதும் வெளிப்படுத்தியுள்ளது. இலங்கை உறுதியான பொருளாதார மீட்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், சுற்றுலாத் துறைக்கும் நேர்த்தியான புறத்தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, Sun Siyam பாசிக்குடாவுக்கு நாம் தூரநோக்குடைய திட்டங்களை வகுத்துள்ளதுடன், இலங்கையை விடுமுறையை செலவிட சிறந்த பகுதியாக திகழச் செய்வதிலும் பங்களிப்பு வழங்க முன்வந்துள்ளோம். இந்தப் பயணத்தில் பங்கேற்பதையிட்டு நான் மிகவும் பெருமையடைகின்றேன்.” என்றார்.

பல விருதுகளை வென்ற விருந்தோம்பல் துறையில் 30 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள ஹோட்டலாக Sun Siyam Resorts திகழ்வதுடன், மாலைதீவுகளில் ஐந்து சொகுசு தனியார் தீவு சொத்துக்களின் உரிமையாளராக திகழ்வதுடன், அவற்றை நிர்வகிக்கின்றது. இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் புட்டிக் பீச் ஹோட்டல் ஒன்றையும் கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X