Gavitha / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பத் வங்கி தனது Sampath MY Bank சேவையை அறிமுகம் செய்துள்ளது. இச்சேவையின் ஊடாக, வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கிளைக்கும் விஜயம் செய்யாமல், கணக்கொன்றை ஆரம்பித்துக் கொள்வதுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
போதியளவு வங்கிக் கிளைகள் இன்மை காரணத்தால், வழமையான வங்கிச் சேவைகளை முன்னெடுப்பதில் பெருமளவு இன்னல்களை அதிகளவானோர் எதிர்கொள்வதைக் கவனத்தில் கொண்டு,
சேவை ஊடாக, வாடிக்கையாளர்களுக்கு கிளையில்லாத வங்கிச்சேவையின் அனுகூலத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், சகாய விலையில் நிதிச்சேவைகளை அனுபவிக்கலாம்.
இச் சேவையை ஊக்குவிக்கும் வகையில், சம்பத் வங்கி கண்டி மற்றும் மாத்தளையைச் சேர்ந்த மொத்தமாக 40 நம்பிக்கையை வென்ற விற்பனை நிலையங்களை நிறுவியிருந்தது. இந்த வைபவம் தம்புளை, பரடைஸ் ரிசோர்ட் அன்ட் ஸ்பா நிலையத்தில் ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெற்றது. இந்த விற்பனை நிலையங்கiளுக்கு சம்பத் வங்கியினால் POSடேர்மினல்கள் வழங்கப்பட்டிருந்ததுடன், இவற்றின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு ampath MY Bank கணக்குகளைச் செயற்படுத்திக் கொள்வதற்கான
அங்கிகாரத்தை நிலையத்தின் முகாமையாளர்களுக்கு வங்கி வழங்கியுள்ளது. இவ்வாறு நியமிக்கப்பட்ட விற்பனை நிலையமொன்றுக்கு வாடிக்கையாளர்கள் விஜயம் செய்து, தமது அலைபேசி இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் ஆகியவற்றை சமர்ப்பித்து Sampath MY Bank கணக்கொன்றை ஆரம்பித்துக் கொள்ள முடியும். இதனைத் தொடர்ந்து,வாடிக்கையாளர்களுக்கு தமது கணக்கில் பணத்தை வைப்புச் செய்வதுக்கான வாய்ப்பு வழங்கப்படும். அதன் பின்னர் கார்ட்டை பயன்படுத்தி பணத்தை மீளப்பெற முடியும் என்பதுடன், பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொள்வனவு செய்யவும் முடியும்.
கார்ட் உரிமையாளர்களுக்கு தமது சம்பத் My Bank கார்ட்டுக்கு எந்தவொரு நாளிலும் தினசரி 5,000 ரூபாய் வரை பணத்தை வைப்புச் செய்து கொள்ள முடியும். மாதாந்த எல்லைப் பெறுமதி 100,000 ரூபாயாக அமைந்துள்ளது. சம்பத் My Bank பாவனையாளர்களுக்கு வௌ;வேறு காரணங்களால் கிளைகளுக்குச் சென்று வங்கிச் செயற்பாடுகளை முன்னெடுக்க இயலாதக் காரணத்தால், சௌகர்யம் மற்றும் பெறுமதி வாய்ந்த சேமிப்பு போன்ற உயர் அனுகூலங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், தினசரி சிறிய தொகை எனும் அடிப்படையில் சிறந்த பெறுமதியையும் வங்கி சேர்த்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .