2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

Sony Bravia 4K HDR Ultra HD TV அறிமுகம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 18 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய Bravia 4K HDR Ultra HD தொலைக்காட்சித் தெரிவுகளை Sony நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. இந்தப் புதிய மேம்படுத்தப்பட்ட தொலைக்காட்சித் தெரிவுகளை நாடு முழுவதும் உள்ள பிரதான Siedles மற்றும் சிங்கர் காட்சியறைகளில் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நீங்கள் முன்னர் கண்டுகளித்த தொலைக்காட்சியின் பட தரத்தை விஞ்சிடும் வகையில் தௌ்ளத்தெளிவு, வர்ணம், கன்ட்ராஸ்ட் மேலும் பல சிறப்பம்சங்களுடன் புதிய HDR திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழக்கூடிய வகையில் இந்த 4K High தொலைக்காட்சி தெரிவுகள் அமைந்துள்ளன.  

Sony இன் புதிய Bravia 4K HDR TV Android TV tm தெரிவுகள், தொலைக்காட்சி பார்க்கும் அனுபவத்தை முற்றிலும் புதிய மட்டத்திற்கு எடுத்துச்செல்லும் வகையில் புதிய மேம்படுத்தப்பட்ட TV தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்காலத்திற்கேற்ற கண்கவர் வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன. HDR ஊடாக பிரகாசம் மற்றும் இருள் தெரிவுகள் வழங்கப்படுவதனால் வீட்டில் தொலைக்காட்சியைக் கண்டுகளிக்கும் அனைவரும் ஒரே விதமான அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்’ என Sony ஸ்ரீ லங்கா பிரதிநிதி அலுவலகத்தின் தலைவர் அலெக்ஸ் யீ தெரிவித்தார்.   

Sony இன் Z9D தொடர்கள், விருது வென்ற X93D தொடர்கள் மற்றும் அதன் 4K HDR தொலைக்காட்சித் தெரிவுகள் மற்றும் ஏனைய சிறந்த முழுமையான ர்னு தொலைக்காட்சி தெரிவுகளின் அறிமுகத்தைத் தொடர்ந்து, இந்த புதிய 2016 BRAVIAtm 4K HDR Android தொலைக்காட்சித் தெரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.   

எமது தொலைக்காட்சி தெரிவுகளுக்கான விநியோகஸ்தர் மற்றும் முன்னணி சில்லறை விற்பனைப் பங்காளராக Siedles மற்றும் சிங்கர் காட்சியறைகள் உள்ளதுடன், அவர்களது அனுபவம், அறிவு மற்றும் சந்தைப் புரிதல் மூலமாக வாடிக்கையாளர்கள் தமது கொள்வனவுத் தீர்மானங்களின் போது தன்னம்பிக்கையை உணரக்கூடியதாக இருக்கும்’ என அலெக்ஸ் யீ தெரிவித்தார்.  
காட்சிப்படுத்தப்பட்ட புதிய தொலைக்காட்சித் தெரிவுகளின் பிரதான அம்சங்களாக Ultra HD மற்றும் HDR திரைகள் காணப்படுவதுடன், இருளின் நிழல்கள் மற்றும் பிரகாசமான ஒளிகளை ஒரே சமயத்தில் காட்டக்கூடியத்தன்மை போன்றவையும் காணப்படுகின்றன.  

இந்தத் தெரிவுகள், புதிய grid-array backlighting கட்டமைப்பு ஊடாக திரைகளின் பின்னால் பன்முக டுநுனு’கள் பயன்படுத்தப்படும் Sony’ இன் புதிய Slim Backlight Drivetm தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.  
4K Processor X1tm ஆனது மிகச்சிறந்த 4K HDR விஷுவல் அனுபவத்தை வழங்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு பிரகாச மட்டத்திலும் துல்லியமான விவரங்களுடன் வண்ண மேப்பிங் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X