2025 ஜூலை 26, சனிக்கிழமை

Speculo 2017 கலைக்கண்காட்சி வெற்றியாளர்கள் கௌரவிப்பு

Gavitha   / 2017 மார்ச் 14 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தேசிய விமானசேவையான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்ஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற Speculo 2017 விருது நிகழ்வு, கொழும்பு ரமடா ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட வரைதல் போட்டியின் வெற்றியாளர்கள் பங்கேற்ற இந்த மாபெரும் கோலாகல நிகழ்வில், வெற்றியீட்டியவர்களுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விருதளித்து கௌரவித்தது. இந்நிகழ்வில் தொழிற்றுறை கலைஞர்கள் மற்றும் இளம் கலைஞர்கள், மற்றும் ஏனைய விசேட விருந்தினர்கள் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். பாடசாலை மற்றும் திறந்த மட்டத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கலைஞர்கள் மற்றும் தேர்வுசெய்யப்பட்ட 15 தொழிற்றுறைக் கலைஞர்களுக்கு விருதுகள், கிண்ணங்கள், வெகுமதிகள் மற்றும் சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன  

பாடசாலை மட்ட வெற்றியாளர்களாக கயாஷனி திசாநாயக்க (ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயம், கொழும்பு 07), W.A கவீஷா கே. வீரசிங்க (தேவி பாளிகா வித்தியாலயம், கொழும்பு 08), எஷான் டி சில்வா (ஆனந்த கல்லூரி, கொழும்பு 10) ஆகியோர் தேர்வுபெற்றிருந்தனர். திறந்த மட்ட போட்டிகளில் திலக் புஷ்பகுமார, S. A. எரங்க ஸ்ரீமால் மற்றும் சாமர ப்ரசாத் தீயமுல்ல ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்டனர். தொழிற்றுறை நிபுணத்துவப் பிரிவில் ஷானக்க குலதுங்க, பசில் கூரே மற்றும் இஷான் ஹேவகே ஆகியோர் பரிசில்களை வென்றனர். நாடளாவிய ரீதியில் யாழ்ப்பாணம், மன்னார், பிபிலே, பலாங்கொடை போன்ற தூர இடங்களிலிருந்தும் இளம் கலைஞர்கள் பங்கேற்றிருந்ததுடன், உயர் கல்வி நிறுனங்களில் பணியாற்றும் விரிவுரையாளர்கள், சித்திரப்பாட ஆசிரியர்கள், மதகுருக்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.  முன்னெடுக்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X