2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

Sports 1st Platinum Awards நிகழ்வுடன் லங்கா பெல் கைகோர்ப்பு

Niroshini   / 2017 பெப்ரவரி 07 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெப்பிட்டல் மகாராஜா ஓர்கனைசேஸன் லிமிட்டெட் (CM OL) நிறுவனத்தின் MTV/MBC மீடியா நெற்வேர்க்ஸ் ஏற்பாடு செய்துள்ள ‘Sports 1st Platinum Awards 2017’ நிகழ்வின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பாடல் பங்காளியாக செயற்படுவதற்கு இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பாடல் சேவைகள் வழங்குனரான லங்கா பெல் நிறுவனம் முன்வந்துள்ளது.   
நாட்டில் மிகச் சிறப்பாக தமது திறமையை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு வீராங்கனைகளை

அங்கீகரித்து பாராட்டுவதற்கும் அவர்களது ஆற்றல்களை கொண்டாடுவதற்குமான ஒரு விருது வழங்கும் இரவாக “Sports 1st Platinum Aw  ards 2017” காணப்படுகின்றது. 2015 செப்டெம்பர் மாதம் முதல், 2016 ஒக்டோபர் மாதம் வரை, உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியதன் மூலம் பிரகாசித்த விளையாட்டுத் துறை ஆளுமைகளுக்கு இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளன.   

லங்கா பெல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான கலாநிதி. பிரசாத் சமரசிங்க இந்த அனுசரணை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், “விளையாட்டு என்பது எந்த வகையில் அறியப்பட்டாலும் அது, சாதி, இன, மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மனிதர்களையும் ஒன்றிணைக்கின்றது”எனறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X