Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூன் 05 , மு.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச தரநிலைக்குச் சென்றடைய, இலங்கையின் இளைஞர்களுக்கு உதவிகளை பெற்றுக் கொடுக்கும் வகையில், TVS, சியத தொலைக்காட்சியுடன் கைகோர்த்து ‘சியத Mr வேர்ள்ட்’ போட்டியை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் போட்டியின் வெற்றியாளருக்குப் புத்தம் புதிய TVS Apache RTR 200 மோட்டார் சைக்கிள் ஒன்று பரிசாக வழங்கப்படும்.
TVS லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே, இந்தப் பங்காண்மையை குறிக்கும் வகையில், கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற அறிமுக நிகழ்வில் Model Shop பணிப்பாளர்களான சங்கீதா வீரரத்ன மற்றும் தனஞ்ஜய பண்டார ஆகியோருக்கு பரிசுகளை கையளித்திருந்தார்.
இந்த நிகழ்வில், Racing “DNA” க்காக அதிகளவு புகழ்பெற்ற TVS Apache RTR 200 மோட்டார் சைக்கிள் நாடு முழுவதும் பயணித்து, போட்டியாளர்களின் நகரங்களைச் சேர்ந்த நலன்விரும்பிகளிடமிருந்து கருத்துகளைச் சேகரிக்கும் நடவடிக்கையும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
TVS லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே கருத்துத் தெரிவிக்கையில், “Mr வேர்ள்ட் போட்டியினூடாக, வலிமை, சுபாவம், அதீதஈடுபாடு, பயிற்சிக்கான அர்ப்பணிப்பு மற்றும் திறமை போன்றன வெளிப்படுத்தப்படுவதுடன், இவற்றின் பிரகாரம் நடுவர்கள் வெற்றியாளரைத் தெரிவு செய்வார்கள். இளைஞர்கள் பற்றி அதிகளவு கவனம் செலுத்தும் வர்த்தக நாமம் எனும் வகையில், இந்த ஆளுமை படைத்தவர்களை நாம் கவனமாக இனங்காண்பதுடன், இதன் காரணமாக இந்தப் போட்டியில் கைகோர்த்துள்ளதையிட்டுப் பெருமை கொள்கிறோம். பல இளம் இலங்கையர்கள் சர்வதேச மட்டத்தில் போட்டியிடத் தயாராகவுள்ளனர். இளைஞர்களின் வர்த்தக நாமம் எனும் வகையில், இந்தப் போட்டியாளர்களுக்கு அவசியமான உதவிகளைப் பெற்றுக் கொடுப்பது எமது பொறுப்பாகக் கருதுகிறோம். சகல போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த நிகழ்வு நினைவிலிருக்கும் ஒன்றாக அமைந்திருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்” என்றார்.
‘சியத Mr வேர்ள்ட் போட்டி’ மின் பேஜன்ட் நிகழ்வுகள் சிலதைக் கொண்டிருக்கும். இதில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் ஒன்றாக ‘கடினமான சவால்’ அடங்குகிறது. TVS சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட மினி பேஜன்ட் நிகழ்வாக இது அமைந்துள்ளது. போட்டியாளர் மத்தியில் வலிமை, ஆற்றல் மற்றும் இயலுமையுடன் போட்டியிடக்கூடிய நிலையை சோதிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
20 May 2025
20 May 2025