Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 14 , பி.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிய பிராந்தியத்தில் மிகப் பெரிய ஊடு பின்னப்பட்ட புடவை (weft knit textile) உற்பத்தி நிறுவனம் டிஜே “Teejay” என அதன் புதிய வர்த்தக் குறியீட்டு நாமத்தை வெளியிட்டது.
முன்னதாக இந்நிறுவனம் Textured Jersey என அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய வர்த்தகக் குறியீட்டு நாமமானது குழுமத்துக்கு வித்தியாசமிக்கப் புத்தாக்ககரமானத் தன்மையை வெளிப்படுத்தியிருந்ததுடன், அனைத்து வகையான நடைமுறை அம்சங்களையும் ஒருங்கிணைப்பதாகவும் அமைந்துள்ளது.
ஒருங்கிணைப்பின் மூலமாக தாய் நிறுவனமான Teejay Lanka PLC,அது கொள்வனவு செய்த நிறுவனங்களை Teejay Prints எனவும்Teejay India, எனவும் குழுமத்தின் வர்த்தகக் குறியீட்டு நாமத்துக்கு அமைவாக அழைக்கப்படுகிறது.
ஹொங்கொங்கை தளமாகக்கொண்ட டிஜே நிறுவனத்தினதும் பசுபிக் டெக்ஸ்டைல்ஸினதும் தலைவராகத் திகழும் பில் லாம், குழுமத்தின் சாதனைகள் குறித்து தாம் பெருமையடைவதாகத் தெரிவித்துள்ளார்.
“16 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து டிஜே இன்று வரை நீண்ட பயணத்தைக் கடந்து வந்துள்ளது. வர்த்தக ரீதியில் நோக்குமிடத்து, சிறந்த பங்காளித்துவமாக விளங்குவது மாத்திரமன்றி இதுவரைக்காலப் பகுதியில் இந்த நிறுவனத்தினால் சாதிக்க முடிந்த விடயங்கள் மகத்தானவையாகும். “Teejay’’ என வர்த்தகக் குறியீட்டு நாமம் சூடப்பட்டமையானது சரியானதடத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு நகர்வாகும். இது குழுமம் என்ற வகையில் விசேட அங்கிகாரத்தைப் பெற்றுத்தரும் என்பது உறுதி. புதிய உச்சங்களைத் தொடுவதற்கு இது உந்துசக்தியாகத் திகழும் என்பது திண்ணம்” என பில் லாம் நம்பிக்கை வெளியிட்டார்.
30 minute ago
32 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
32 minute ago
1 hours ago
1 hours ago