2025 மே 21, புதன்கிழமை

The Body Shop புதிய தெரிவுகள் அறிமுகம்

Editorial   / 2018 மே 06 , பி.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

The Body Shop தனது விற்பனை நிலையங்களில் Strawberry Haircare மற்றும் Lip Juicers ஆகிய புதிய தெரிவுகளை அறிமுகம் செய்துள்ளது. இனிய நறுமணத்தை வழங்குவதுடன், தினசரி பராமரிப்புக்கு அவசியமான சக்தி வாய்ந்த சேர்மானங்களையும் தன்வசம் கொண்டுள்ளது.  

Strawberry Haircare ஆனது இரு எளிமையான தயாரிப்புகளின் சேர்மானமாக அமைந்துள்ளது. இதில் Strawberry Clearly Glossing சம்பு மற்றும் Strawberry Clearly Glossing கண்டிஷனர் ஆகியன அடங்கியுள்ளன. இவை இரண்டும் இத்தாலியிலிருந்து பெறப்பட்ட Strawberry சாற்றில் தயாரிக்கப்பட்டுள்ளன.

கூந்தலுக்கு பசுமையான, பழங்கள்சார் இனிய நறுமணத்தை வழங்கும். மேலும், மெக்சிகோவிலிருந்து பெறப்படும் சமூக வர்த்தக சேதன கற்றாழையிலிருந்து குணமாக்கும் உள்ளம்சங்கள் சேர்க்கப்படுகின்றன.  

Glossing சம்பு, கூந்தலுக்கும் சிகைக்கும் மிருதுவானதாக அமைந்துள்ளதுடன், தினசரி பாவனைக்குச் சிறப்பானது. ஓட்டாத் தன்மை கொண்ட இந்த சேர்மானம், கூந்தலைப் பளபளப்பாகப் பேண உதவும். கூந்தலுக்கு பாரம் ஏற்படுத்தாமல் கூந்தலின் மேற்பரப்பை மிருதுவாகப் பேண உதவுகிறது.

சோபை இழந்த கூந்தலுக்கு இது சிறந்த தீர்வாக அமைந்துள்ளது. இந்த சம்பு சோடியம் லொரெத் சல்பேட் கொண்டு தயாரிக்கப்படுவதால், மிருதுவாக அழுக்கை அகற்றுவதுடன், நுரைக்கும் தன்மை கொண்டுள்ளதால், கூந்தல் உலர்வடைதலைக் குறைக்கின்றது. கிளிசரின் ஊடாக, கூந்தலில் ஈரப்பதனை பேண உதவுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .