Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 மே 06 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான உப செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் அண்மையில் ஹங்வெல்லவில் அமைந்துள்ள நியு அந்தனீஸ் பார்ம்ஸ் பகுதிக்கு விஜயம் செய்திருந்தார். இலங்கையின் முன்னணி கோழிப்பண்ணைச் செய்கையாளர்களாகத் திகழும் நியு அந்தனீஸ் பார்ம்ஸ், நிலைபேறாண்மை தொடர்பில் பின்பற்றும் செயன்முறைகளையும், அமெரிக்காவுடன் கட்டியெழுப்பும் பிணைப்புகளையும் அவர் பாராட்டியிருந்தார்.
நியு அந்தனீஸைப் பொறுத்தமட்டில் இந்த விஜயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருப்பதுடன், தமது உற்பத்திச் செயன்முறையில் நிலைபேறாண்மையை பின்பற்றிய நவீன வசதிகள் படைத்த பண்ணையை வெளிப்படுத்தக் கூடியதாக இருந்தது. உப செயலாளர் டெய்லர் தமது இலங்கைக்கான விஜயத்தின் போது, நாட்டின் விவசாயத் துறைக்கு USDA இன் ஆதரவை வலுப்படுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடியிருந்தார்.
தமது பங்காண்மையினூடாக நாட்டில் உணவு பாதுகாப்பை எவ்வாறு மேம்படுத்துவதில் பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும் என்பது தொடர்பில் உப செயலாளர் மற்றும் நியு அந்தனீஸ் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
U.S. Soybean Export Council (USSEC) இனால் வழங்கப்படும் 'Fed with Sustainable U.S. Soy' எனும் முத்திரையை பெற்றுக் கொண்ட முதலாவது சர்வதேச நிறுவனமாக நியு அந்தனீஸ் திகழ்கின்றது. அதனூடாக அமெரிக்காவிடமிருந்து நிலைபேறான மூலப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மேலும் பல நிறுவனங்களும் இந்த வழிமுறையை பின்பற்ற ஆரம்பித்திருந்தன.
ஸ்தாபிக்கப்பட்டது முதல், விலங்கு நலன்புரி நடவடிக்கைகளில் அமெரிக்காவின் தேசிய கோழி இறைச்சி சம்மேளனத்தினால் (NCC) நிர்ணயிக்கப்பட்டுள்ள பண்ணை மற்றும் உற்பத்தி செயற்பாடுகளில் விஞ்ஞான ரீதியில் உறுதி செய்யப்பட்ட வழிமுறைகளை அந்தனீஸ் பின்பற்றுகின்றது. அண்மையில் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட FSSC 22000 சான்றிதழையும் பெற்றுள்ளது.
தனது “பசுமை” எனும் இலச்சினைக்காக புகழ்பெற்றுள்ள நியு அந்தனீஸ் பார்ம்ஸ், சூழலுக்கு நட்பான செயன்முறைகளை பின்பற்றுவதுடன், தொடர்ச்சியாக தொழில்துறையில் புதிய நியமங்களை ஏற்படுத்தி வருகின்றது. உயிரியல் ரீதியில் உக்கக்கூடிய பொதியிடலை பின்பற்றும் இலங்கையின் ஒரே உற்பத்தியாளராகத் திகழ்வதுடன், ISO 14064-1:2018 நியமங்களின் பிரகாரம் கட்டுப்பாட்டு சம்மேளனத்திடமிருந்து பச்சைஇல்ல வாயு (GHG) உறுதிப்படுத்தல் அறிக்கையை பெற்றுள்ள ஒரே நிறுவனமாகவும் திகழ்கின்றது.
தமது கோழி இறைச்சி உற்பத்தி பெறுமதி சங்கிலித் தொடரில் விரிவாக்கத்தை மேற்கொள்வதில் குழுமம் கவனம் செலுத்துகின்றது. அதில், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், தனது சில்லறை விற்பனை பிரசன்னத்தை வலுப்படுத்தல், ஏற்றுமதி சந்தைகளை வளர்த்தல் போன்றன அடங்கியுள்ளதுடன், அவற்றை நிலைபேறாண்மைக்கு முக்கியத்துவமளித்து மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது. அதனூடாக, போஷாக்கான, பாதுகாப்பான மற்றும் பசுமையான கோழி இறைச்சியை தனது உண்மையான நுகர்வோர்களுக்கு பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கின்றது.
13 minute ago
44 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
44 minute ago
2 hours ago
3 hours ago