2025 ஜூலை 26, சனிக்கிழமை

UTEஇன் பொறியியல் தீர்வுகள் காட்சியறை திறப்பு

Gavitha   / 2017 மார்ச் 06 , பி.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர் தரம் வாய்ந்த வர்த்தக நாமங்களைக் காட்சிப்படுத்தும் வகையில், யுனைட்டட் டிராக்டர் அன்ட் எக்யுப்மன்ட் (பிரைவட்) லிமிட்டெட் (UTE), வத்தளையில் தனது நவீன காட்சியறையை மங்களகரமாக அங்குரார்ப்பணம் செய்திருந்தது. இந்தக் காட்சியறையை மெகாபொலிஸ் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன அங்குரார்ப்பணம் செய்திருந்ததுடன், மேல் மாகாண மெகாபொலிஸ் திட்டமிடல் பணிப்பாளர் லக்ஷ்மன் ஜயசேகர மற்றும் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். UTE சிரேஷ்ட நிர்வாகம் மற்றும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். 

நவீன வசதிகளைக் கொண்ட இந்தக் காட்சியறை, பாரியளவு இடவசதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், உயர் தரம் வாய்ந்த கட்டர்பில்லர் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளது. இதில் நிர்மாண சாதனங்களான Skid Steer Loaders, Backhoe Loaders, Road Rollers போன்ற பல இயந்திரங்கள் உள்ளடங்குகின்றன. மேலும், Cat Power Generators, Dexion Racking Systems, FS Curtis Air Compressors, BT Lift & Reach Trucks மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த Cat Solar தயாரிப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  

கட்டர்பில்லர் சார்பாக கட்டர்பில்லர் பங்களுர் மாவட்டத்தின் முகாமையாளர் ஈ.சி.மனோஹரன் கருத்துத் தெரிவிக்கையில், “ UTE, தனது உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்கள், பயிற்சி நிலையங்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த மற்றும் அர்ப்பணிப்பான அணியினருடன் சிறந்த சேவை சிறப்பை வழங்கிய வரலாற்றைக் கொண்டுள்ளது. Catஇன் விநியோகஸ்த்தர் மாதிரிக்கமைய சிறந்த செயற்பாடுகள் மற்றும் செயற்றிட்டங்கள் போன்றவற்றை வழங்கி வருகிறது. UTE தொடர்ச்சியாகத் தனது தலைமைத்துவ நிலையை பேணி வருகிறது, எதிர்கால செயற்பாடுகளிலும் இந்நிறுவனம் தொடர்ந்து வெற்றியை எய்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X