2025 ஜூலை 26, சனிக்கிழமை

Vaseline சரும சுகாதார வாரம் ஆரம்பம்

Gavitha   / 2017 மார்ச் 20 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மது சருமம் மாற்றமடையும் காலநிலைக்கேற்ப எமக்கு பாதுகாப்பு படலமாக அமைந்துள்ளது. இந்தப் பாதுகாப்பு படலத்தை பராமரிக்காவிடின், அது மோசமடைந்து, சோபை இழந்து, உலர்ந்து கருமை நிறமடையும். இதன் மூலமாக எமது சருமத்துக்கு அவசியமான ஈரப்பதனூட்டல், செழுமையூட்டல் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை எமக்கு உணர்த்தும்.  

உடல் சருமத்தின் முக்கியத்துவம் பற்றி இலங்கையர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில், Vaseline அண்மையில் தனது “Skin by Vaseline” எனும் செயற்றிட்டத்தை அறிமுகம் செய்திருந்தது. இதனூடாக, வாடிக்கையாளர்களுக்கு சூழல் மற்றும் புறநிலைகள் காரணமாக சருமம் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகள் பற்றி விளக்கமளிக்கப்படுகிறது.  

கொழும்பு பார்க் ஸ்ரீwட் மியுவ்ஸில் அண்மையில் கல்விசார் விழிப்புணர்வூட்டும் செயலமர்வொன்றை Vaseline ஏற்பாடு செய்திருந்ததுடன், போஷாக்கு, அழகு, அழகியல் பொருட்கள் மற்றும் கூட்டாண்மைத்துறை ஆகியவற்றின் நிபுணர்களை ஒன்றிணைத்து இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுத்திருந்தது. “இலங்கை பெண்கள் மத்தியில் சரும சுகாதாரம் மற்றும் உடல் சரும பராமரிப்பு பழக்கங்கள்” எனும் தலைப்பில் உரையாடலை மேற்கொண்டிருந்தனர். இந்தக் கலந்துரையாடலில், மனித போசணை வைத்தியர். லசித் உயனகே, ரமணி சலோன் உரிமையாளர் ரமணி பெர்ணான்டோ, முன்னாள் இலங்கை அழகு ராணி ரொஸான் டயஸ், மற்றும் யுனிலீவர் ஸ்ரீலங்காவின் கூந்தல் மற்றும் சரும பராமரிப்பு சந்தைப்படுத்தல் பொறுப்பதிகாரி நிலுஷி ஜயதில, Vaseline வர்த்தக குரியின் முகாமையாளர் முனாசா ரவீக் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.  

சமபல ஆகார பழக்கங்கள் மற்றும் ஈரதப்பதனூட்டும் லோசன் ஆகியவற்றுடன் எவ்வாறு சருமத்தைப் பாதுகாப்பது என்பது தொடர்பில், நிபுணத்துவ ஆலோசனைகளை சருமவியல் நிபுணர்கள் பகிர்ந்திருந்தனர். அழகியல் நிபுணர்கள் சரும பராமரிப்பை எவ்வாறு பேணுவது என்பது தொடர்பான விளக்கங்களை வழங்கியிருந்ததுடன், பெண்கள் மத்தியில் நம்பிக்கையை ஊட்டும் விளக்கங்களையும் வழங்கியிருந்தனர்  

யுனிலீவர் ஸ்ரீலங்காவின் கூந்தல் மற்றும் சரும பராமரிப்பு சந்தைப்படுத்தல் பொறுப்பதிகாரி நிலுஷி ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “எமது சரும பராமரிப்புத் தெரிவுகள் என்பது, முகத்துக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாக அமைந்துள்ளன. எமது உடல் சருமத்துக்கும் நாம் பெருமளவு கவனம் செலுத்த வேண்டும் என்பது அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதற்காக, சூழல் காலநிலைகளுக்கு பொருந்தும் வகையில் பொடி லோசன்களைப் பயன்படுத்த வேண்டும்.

Vaseline Intensive Care பொடி லோசனை தினசரி பயன்படுத்துவதனூடாக, ஒரே வர்ணமான சருமத்தை பெற உதவுவதுடன், உங்கள் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்” என்றார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X