2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

Virtusa Polaris க்கு விருது

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

20ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் நிகழ்வில் 2014ஆம் ஆண்டுக்கான 'கணினி தொடர்பான சேவைகளில் அதிகபட்ச அந்திய செலாவணியைச் சம்பாதித்துள்ள நிறுவனம்' என்ற இனங்காணல் அங்கிகாரத்தை ஏசைவரளயீழடயசளை பெற்றுள்ளது.  

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் ஏற்றுமதி தொடர்பான சிறப்பான பெறுபேறுகளுக்கு இனங்காணல் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தனது சர்வதேச வாடிக்கையாளர்கள் அவர்களது டிஜிட்டல் வளர்ச்சிவாய்ப்புக்களை மீள்வடிவமைக்க உதவும் வகையில், நவீன தீர்வுகளை வடிவமைத்து வருகின்ற VirtusaPolaris நிறுவனத்தின் உள்நாட்டு தொழிற்பாடுகள் மூலமாக நாட்டின் அந்நிய செலாவணி வருமானதுக்குப் பாரிய அளவில் பங்களிப்பை வழங்கியுள்ளது.

கல்விசார்ந்த ஈடுபாடுகள் மற்றும் திறமைசாலிகளை விருத்தி செய்யும் நடவடிக்கைகள், மற்றும் அவ்வாறே தொழிற்துறை முன்னிலை வகிக்கும் அதன் நிலைபேற்றியல் நடைமுறைகள் தொடர்பான அதன் முதலீடுகளினூடாக உள்நாட்டு பொருளாதாரத்திற்கும் நிறுவனம் தனது பெறுமானத்தை சேர்ப்பித்து வருகின்றது.

இந்த இனங்காணல் அங்கிகாரம் தொடர்பாக VirtusaPolaris நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதித் தலைமை அதிகாரியும், பிரதம தகவல் அதிகாரியும், வியாபார மேன்மைப்படுத்தலுக்கான தலைமை அதிகாரியும், பொது முகாமையாளருமான மது ரட்ணாயக்க கருத்து வெளியிடுகையில், 'ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் நிகழ்வில் 'கணினி தொடர்பான சேவைகளில் அதிகபட்ச அந்நிய செலாவணியை சம்பாதித்துள்ள நிறுவனம்' என்ற இனங்காணல் அங்கிகாரத்தை சம்பாதித்துள்ளமையையிட்டு மிகவும் கௌரவம் அடைந்துள்ளோம்.

உலகிலுள்ள மிகப் பாரிய தொழில் நிறுவனங்கள் சிலவற்றின் டிஜிட்டல் சார்ந்த எதிர்காலத்தை மீள்வடிவமைப்பதில் எமது அணிகள் ஆற்றிவருகின்ற மிகச் சிறப்பான பணிகளுக்கு இது மற்றுமொரு மகத்தான சான்றாக அமைந்துள்ளது.' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X