2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

Vision Care இன் கனிஷ்ட ஓவியப்போட்டி

Gavitha   / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், சுய ஆக்கத்திறன் வெளிப்பாட்டையும் வெளிக்கொணரும் வகையில், நாட்டின் முன்னணி கண் பராமரிப்பு மற்றும் கேட்டல் குறைபாடு தீர்வுகளை வழங்கும் Vision Care நிறுவனம், களிப்பான அம்சங்கள் நிறைந்த, விறுவிறுப்பான மற்றும் புத்தாக்கத்திறன் வாய்ந்த ஓவியப்போட்டி ஒன்றை அதன் நவீன வசதிகள் படைத்தத் தலைமையகத்தில் ஏற்பாடு செய்திருந்தது. உலகளாவிய ரீதியில் சிறுவர் தினம் ஒக்டோபர் 1ஆம் திகதி கொண்டாடப்பட்ட போது, இத்தினத்தைக் குறிக்கும் வகையில் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

“கிட்ஸ் அன்ட் கலர்ஸ்” எனப்பெயரிடப்பட்டிருந்த இந்தக் கனிஷ்ட ஓவியப்போட்டியில், நாடு முழுவதையும் சேர்ந்த 12 வயதுக்குக்குறைந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் பங்குபற்றியிருந்தனர். இறுதி போட்டியில் 50 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்கள் அனைவருக்கும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டிருந்ததுடன், பெறுமதி வாய்ந்த சான்றிதழ்கள் மற்றும் சிறந்த ஐந்து ஓவியங்களுக்கானப் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டிருந்தன.  

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக, சௌந்தர்ய கலை பல்கலைக்கழகத்தின் சௌந்தர்ய கலை பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர். எம்.ஆர். பொடிநிலமே பங்கேற்றிருந்தார். மத்தியஸ்தர்கள் குழுவில், ஓவியக் கலைஞரான கல்வி அமைச்சின் - அபிவிருத்தி உதவியாளர் சேனாநந்த இந்திரஜித் மேர்திஸ் மற்றும் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களான தீப்த குமார மற்றும் சத்சர இலங்கசிங்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.  

Vision Care நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான ஜானக ஃபொன்சேகா கருத்துத்தெரிவிக்கையில், “சிறுவர்கள் ஓவியங்களில் ஈடுபடுவது என்பது அவர்களுக்கு சிறந்த பயிலும் அனுபவமாக அமைந்துள்ளது. அவர்களுக்கு சுய திறன் வெளிப்பாட்டை மேம்படுத்த உதவியாக அமைந்திருப்பதுடன், நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் முடியும். அத்துடன் மேலும் பல அனுகூலங்களையும் பெற்றுக்கொள்ளலாம். உயர்ந்த மட்ட பங்குபற்றல் மற்றும் ஆர்வத்தைக் கண்டு நாம் வியப்படைந்தோம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X